தலைசிறந்த நடிகர் கார்த்தி! “தீரன் அதிகாரம் ஒன்று ” வில்லன் நடிகர்! ரோஹித்பதக்

0

 311 total views,  1 views today

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை பற்றி வில்லன் ரோஹித் பதக் பேசியது

கார்த்தி போன்ற தலைசிறந்த நடிகருடன் நடித்தது மகிழ்ச்சியான ஒன்று. அவர் அதிகம் ஒத்துழைக்கக்கூடிய சிறந்த நபர் ஆவார். நானும் கார்த்தியும் அவரவர் திரை துறையை பற்றி அதிகம் விவாதிப்பது உண்டு.அவர் மிகவும் அமைதியானவர் , என்னோடு நட்பாக பழகுவார். முக்கியமான காட்சிகளில் எனக்கு உதவுவார். சில நேரங்களில் நான் மிகவும் பயங்கரமான சண்டை மற்றும் சேசிங் காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கும். பஸ் மேல் படமாக்கப்பட்ட பரபரப்பான ஆக்சன் காட்சியை படம்பிடிக்க 9 முதல் 10 நாள் ஆகியது. தினமும் அந்த காட்சியை படமாக்கும் போது நானும் கார்த்தியும் பஸ் மேல் ஏறி அமர்ந்திருப்போம். இந்த காட்சியை படமாக்க ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் எங்களுக்கு அதிக அளவில் ஒத்துழைப்பு தந்தார். இப்போது நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். சண்டை காட்சியை படமாக்கும் போது தன்னுடைய உதவியாளர்களை என்னோடு இருக்குமாறு கூறி பாதுகாப்பாக அக்காட்சிகளை படம்பிடித்தார் தினேஷ்.

நான் எப்போதும் படபிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னேரே படபிடிப்பு தளத்துக்கு சென்று விடுவேன். இயக்குநர் வினோத் தான் எப்போதும் படபிடிப்பு தளத்துக்கு முதல் ஆளாக வருபவர். நான் சீக்கிரம் வருவதை பார்த்து. அவருடைய உதவி இயக்குநர்களிடம் கூறி என்னை படபிடிப்பு தளத்துக்கு கடைசியாக அழைத்து வருமாறு கூறினார் வினோத்.
படம் ரிலீஸ் ஆகும் நாள் அன்று என்னுடைய கைபேசியை அனைத்து வைத்திருந்தேன். படத்துக்கு என்ன ரிசல்ட் வருமோ. எல்லோரும் படத்தை பற்றி என்ன எழுத போகிறார்களோ என்றோ பயந்துகொண்டு இருந்தேன். ஆனால் படத்துக்கு நல்ல விமர்சனம் வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றார் ரோஹித் பதக்.

இங்கே தென்னிந்திய சினிமாவில் எல்லாம் சரியாக உள்ளது என்றும். தயாரிப்பு நிர்வாகம் மிகச்சிறப்பாக உள்ளது என்றும் கூறினார்.

Share.

Comments are closed.