தாயை அனாதை இல்லத்தில் விட்டு வேதனை படுத்த வேண்டாம்- ராகவா லாரன்ஸ்

0

 834 total views,  1 views today

IMG-20170221-WA0080

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஏற்கனவே அம்பத்தூரில் ஸ்ரீ ராகவேந்திரர் கோவில் கட்டி உள்ளார்.  அந்த கோவில் எதிரிலேயே அவரது தாய் கண்மணிக்கு கோயில் கட்டிக் கொண்டிருக்கிறார் அது நிறைவடையும் கட்டத்தில் உள்ளது.

 

அந்த கோவிலில் காயத்திரி தேவிக்கு 13 அடி சிலையும், தனது அம்மா கண்மனிக்கு 5 அடி சிலையும் ராஜஸ்தானில் வடிவமைக்கப் பட்டு வந்து விட்டது. கடவுளும், பெற்ற தாயும் ஒன்றுதான் என்று உலகுக்கு நிரூபிக்கும் கோவிலாக இது இருக்க வேண்டும் என்பதற்காக அந்த காயத்திரி தேவி சிலைக்கு கீழேயே தனது தாயின் சிலையையும் வைக்க உள்ளார் லாரன்ஸ்.

 

மார்ச் மாதம் அல்லது தமிழ் புத்தாண்டு அன்று கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது..விழாவில் ஏராளமான திரையுலகினர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். உலகத்தில் உள்ள எல்லா தாய்க்கும் இந்த கோவில் சமர்ப்பணம் …

உள்ளத்திலும் இல்லத்திலும் வைத்து போற்றி பாது காக்க வேண்டிய தாயை தயவு செய்து அனாதை இல்லத்தில் விட்டு 

வேதனை படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .. இவ்வாறு லாரன்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்

 

Share.

Comments are closed.