ஆர்.எஸ்.வின்னர் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் கே.என்.ராஜேஷ் தயாரிக்கும் படம் “ தெரியும் ஆனா தெரியாது “
முன்தினம் பார்த்தேன், டூ, எப்போதும் வென்றான் போன்ற படங்களில் நடித்த சஞ்சய் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தியா நாயர் அறிமுகமாகிறார். மற்றும் கே.என்.ராஜேஷ், சாம்ஸ், பிச்சைக்காரன் மூர்த்தி, பயில்வான் ரங்கநாதன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – மனோஜ் பத்ரா – வேதா – செல்வம்.B.S.c.,D.F.Tech
இசை – அம்ரிஷ்
பாடல் கள் – சொற்கோ
பி ன்னணி இசை – என்.எல்.ஜி.சிபி
படத்தொகுப்பு – அத்தியப்பன் சிவா
கலை – டி.என்.கபிலன்
தயாரிப் பு – கே.என்.ராஜேஷ்
எழுத்து இயக்கம் – யாழ் குணசேகரன்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..
தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் கபிலன் அங்கு நடக்கும் சில பிரச்சனைகளால் ஏற்படும் மன உளைச்சலிலிருந்து விடுபட தன் தோழி மற்றும் நண்பர்களுடன் மலைப்பிரதேசத்திற்கு வருகிறான். காட்டுப் பகுதியின் ஒரு இடத்தில் மூலிகை இலைகள் மூலம் தயாரிக்கப் படும் மதுவை சாப்பிடுகிறார்கள். போதையில் நண்பர்களுக்குள் சண்டை ஏற்பட்டு, எதிர்பாராத விதமாக கபிலன் சாகடிக்கப் படுகிறான்.
பயத்தில் கபிலனை அங்கேயே விட்டு விட்டு மலையிலிருந்து கீழ் அடிவாரத்திற்கு வரும் கபிலனின் நண்பர்களுக்கு கபிலனிடமிருந்து போன் வர, அதிர்ச்சி அடையும் நண்பர்கள் கபிலன் உயிரோடு இருப்பதும், ஒரு விபரீதத்தில் சிக்கியிருப்பதும் தெரிந்து அவனை காப்பாற்ற செல்கிறார்கள். அப்போது அவர்களுக்கு பல இடையூறுகள் ஏற்படுகிறது. அவற்றையெல்லாம் கடந்து கொலை நடந்த இடத்திற்கு வரும் அவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன என்பதுதான் படத்தின் திரைக்கதை. கேரளா, மூனாறு, காந்தலூர், அதிரப்பள்ளி காடுகள் மற்றும் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது என்றார் இயக்குனர் யாழ் குணசேகரன்.