தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டிய இரும்புத்திரை

0

 217 total views,  1 views today

விஷால் ஆக்ஷன் கிங் அர்ஜூன் சமந்தா இணைந்து நடித்த இரும்புத்திரை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் வெற்றிக் கொடி நாட்டியது. அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கிய இப்படம் அபிமன்யுடு என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெளியாகி வசூலில் சக்கை போடுபோட்டு வருகிறது. இதுவரை பனிரெண்டு கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் அபிமன்யுடு தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றி நடைபோடுட்டு வருகிறது.

இந்த தொழில் நுட்ப யுகத்தில் சைபர் குற்றங்கள் பெருகி வருவதையும், அதனால் நமக்கு பொருளாதார இழப்புகள் ஏற்படுவதுடன், அந்தரங்கமே அம்பலமாவது குறித்தும் நல்ல கதைதக்களத்தில் விரிவாக அலசியது இரும்புத் திரை.  எனவே இந்தக் கதை எல்லா மொழிகளிலும் ரசிகர்களால் விரும்பப்படும் யுனிவர்சல் சப்ஜெக்ட் என்று சொன்னால் மிகையில்லை.

Share.

Comments are closed.