தேணான்டாள் பிலிம்ஸ்’ திரையரங்க உரிமத்தை பெற்ற ‘R.K.நகர்’

0

Loading

சரவண ராஜன் இயக்கத்தில், வெங்கட் பிரபுவின் ‘ப்ளாக் டிக்கெட் கம்பெனி’ நிறுவனமும் பத்ரி கஸ்துரியின் ‘ஷ்ரத்தா என்டர்டைன்மெண்ட்’ நிறுவனமும்  இணைந்து தயாரித்துள்ள ‘R.K.நகர்’ படம், தனது சுவாரஸ்யமான தலைப்பாலும், அதை விட சுவாரஸ்யமான டீசராலும் , 2018 ஆம் ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ஆகியுள்ளது. வைபவ் மற்றும் சனா அல்தாப் நடிப்பில் உருவாகியுள்ள ‘R.K.நகர்’ படம் வர்த்தக தரப்பிலும் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கிவருகிறது . விநியோகத்தில் ஜாம்பவனான ‘தேணான்டாள் பிலிம்ஸ்’ இப்படத்தின் தமிழக திரையரங்க உரிமத்தை பெற்றுள்ளது இப்படத்தில் பலத்தை மேலும் கூட்டியுள்ளது.
‘R.K.நகர்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றுள்ளது. படப்பிடிப்பு  முடிந்த கையோடு Post Production பணிகள் தொடங்கியுள்ளன. பிரேம்ஜி அமரனின் இசையில் , S வெங்கடேஷின் ஒளிப்பதிவில், பிரவீன் K L படத்தொகுப்பில் ‘R.K.நகர்’ உருவாகியுள்ளது.
Share.

Comments are closed.