தேனிசை மழை பொழியும் யவன் சங்கர் ராஜாவின் பியார் ப்ரேம காதல்

0

 253 total views,  1 views today

‘High on Love’ பாடலில் திளைத்த பிறகு,  அடுத்து காதல் போதையை திகட்ட திகட்ட அனுபவிக்கும் காலம் வந்திருக்கிறது. ஆம், யுவன் ஷங்கர் ராஜாவின் இசை என்றவுடனே அவரின் இசை போதைக்கு அடிமையாவதை தவிர்க்க முடியாது. அவரின் மந்திர இசையில் காதல் பாடல்கள் நமது கண்களை கண்ணீரால் நனைக்காமல் இருக்காது. தன்னையறியாமல் கத்த வைக்கும், தரையில் நம் கால்களை நடனமாட வைக்கும். இதை விட ஒரு போதை இருக்க முடியுமா என்ன? ஒட்டுமொத்த நகரமும் யுவன் இசையில் மயங்கி கிடக்க, கூடுதலாக சொர்க்கம் போன்ற அமைதி நமது ஆன்மாவை சுவைக்கும்.
பியார் ப்ரேம காதல் என்ற வார்த்தைகளும், யுவன் ஷங்கர் ராஜாவின் இசை என்ற அடைமொழியுமே யுவனின் இசை விருந்தில் நாம் மூழ்குவதற்கு தயாராக சொன்னது போல அமைந்தது. முதல் போதையாக ‘High on Love’ அமைந்தது, நீண்ட காத்திருப்புக்கு பிறகு ‘Dope’ என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகிறது.
மிக குறுகிய காலத்திற்குள்ளாகவே இந்த பாடல் ட்ரெண்டிங்கில் டாப் இடத்திற்கு சென்றதுடன், மில்லியன் பார்வைகளை மிக வேகமாக கடந்திருக்கிறது. மோகன் ராஜன் பாடல் வரிகளும், யுவனின் மயக்கும் இசையும் இசை ரசிகர்களுக்கு உயர்ந்த உணர்வுகளை அளித்திருக்கிறது.
படத்தின் பாதி வெற்றி அதன் பாடல்களின் வெற்றியில் உள்ளது என்பது எழுதப்பட்ட, நிரூபணமான ஒரு விதி. இரண்டு பாடல்களிலேயே பியார் பிரேம காதல் படத்துக்கு ஈர்ப்பு அதிகமாகி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக ‘டோப்’ பாடல் இசை ரசிகர்களின் நரம்புகளுக்குள் புது எனர்ஜியை பாய்ச்சியுள்ளது” என்றார் இயக்குனர் இளன்.
மேலும் படத்தின் முழு ஆல்பத்தையும் ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம் என்ற மகிழ்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் இளன். படத்தை கூடிய விரைவில் வெளியிடவும் தீவிரமான முயற்சிகள் நடந்து வருகின்றன. 
பியார் பிரேம காதல் படத்தில் ஹரிஷ் கல்யாண், ரைஸா வில்சன் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். கே ப்ரொடக்‌ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் இர்ஃபான் மாலிக் ஆகியோரோடு இணைந்து ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருக்கிறார்.
Share.

Comments are closed.