தோல் மற்றும் அழகியல் மருத்துவமனை

0

 696 total views,  1 views today

55749ec8-f92e-4d69-a940-a20ff04db341
” இஸ்மோ [ Ismo ] தோல் மற்றும் அழகியல் மருத்துவமனை ” சென்னை ஆழவார்பேட்டையில் பல பிரபலங்கள் மத்தியில் துவங்கப்பட்டது . இந்த அழகியல் [ Aesthetic ] மருத்துவமனை  உலக  தரம் வாய்ந்த தொழில்நுட்ப  வசதிகளுடனும் மருத்துவர்களுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் பெரிய பல சாதனைகளை செய்த திரு . மனோஜ் நைனார் அவர்களே இந்த ‘இஸ்மோ ‘விற்கு நிறுவனர் ஆவர். ‘பாலிவுட்டின் அழகியல் டாக்டர் ‘ என அழைக்கப்படும் உலக புகழ் அழகியல் மருத்துவர் ராஷ்மி ஷெட்டி ‘இஸ்மோ [ Ismo ] ‘ வுடன் இணைந்து செயல்படவுள்ளார் .
காஸ்மெடிக்ஸ் மருத்துவத்தில் 15 வருட அனுபவம் கொண்டவர்  ராஷ்மி ஷெட்டி. இவர் உலக புகழ் பெற்ற  பிரபலங்களின் அழகியல் மருத்துவராக மட்டுமில்லாமல் ,இந்த துறையின் முன்னோடியாகவும் , அழகியல் புத்தகங்களுக்கு ஆசிரியராகவும் , அழகியல் மருந்துகளின் நிபுணராகவும் திகழ்கிறார். பல ஆயிர முகங்களை அழகு படுத்தி , அவர்களின் மறைந்துள்ள முழு  இயற்கை அழகை வெளிகொண்டுவந்துள்ளார் ராஷ்மி ஷெட்டி. நடிகர்கள் கார்த்தி , ஜி வி பிரகாஷ் , S J சூர்யா , பரத் , நடிகைகள் ஐஸ்வர்யா மேனன் , ரூபா மஞ்சரி , சம்யுக்தா, மித்ரா மிதுன் , சஞ்சனா சிங்க் மற்றும் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ஜோதி கிருஷ்ணா போன்ற பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .
Share.

Comments are closed.