நகைச்சுவை கலந்த திகில் படமாக உருவாகி இருக்கும் “மியாவ்”

0

 1,598 total views,  1 views today

பூனை தனது கண்களை மூடிவிட்டால் உலகமே இருண்டுவிட்டதாக நினைக்குமாம்…. அதனால் தான் வீட்டில் நாய்கள் வளர்ப்பதை காட்டிலும் பூனைகளை வளர்ப்பது, சிரமம்மாக இருக்கும்….அத்தகைய குணாதியசங்களை கொண்ட  பூனையின் உடம்புக்குள்  இளம் பெண் ஒருவரின் ஆவி புகுந்து, தன்னை கொன்றவர்களை  பழி வாங்கினால்  எப்படி இருக்கும்…..இது தான் ‘குளோபல்  வுட்ஸ் மூவிஸ்’  சார்பில் வின்சென்ட் அடைக்கலராஜ்  தயாரித்து, அறிமுக இயக்குநர் சின்னாஸ் பழனிசாமி (பிரபல விளம்பர பட இயக்குநர்) இயக்கி இருக்கும்  ‘மியாவ்’  படத்தின் ஒரு வரி கதை.  
 
 
மியாவ் படத்தில் புதுமுகம் ராஜா, சன் மியூசிக் புகழ் சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார், ஊர்மிளா காயத்ரி மற்றும் ஷைய்னி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும், டேனியல், டெலிபோன் ராஜ், ஆனந்த் தாகா, ஸ்டான்லி, மைனா பாலு மற்றும் சிறுமி யுவினா முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவாளர் போஜன் கே தினேஷ், இசையமைப்பாளர் ஸ்ரீஜித் இடவனா, படத்தொகுப்பாளர் சதிஷ் சூர்யா, கிராபிக்ஸ் – ரமேஷ் ஆச்சார்யா, கலை இயக்குநர் ஆறுசாமி, நடன இயக்குநர் ஷெரீப், பாடலாசிரியர்கள் விவேக் வேல்முருகன் – நவீன் கண்ணன் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் என் ஜே சத்யா  என பல  திறமை வாய்ந்த  தொழில் நுட்ப கலைஞர்கள்  மியாவ் படத்தில் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு. 
 
 
 நகைச்சுவை கலந்த திகில் படமாக உருவாகி இருக்கும் மியாவ் படத்தின் டிரைலரையும், பாடல்களையும்  சமீபத்தில் பார்த்த பிரபல தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ் தாணு  கூறியதாவது :  ” ஒரு திரைப்படத்தில் முதல்  முறையாக ஒரு பூனை முன்னணி கதாபாத்திரத்தில்  நடித்திருக்கிறது என்பதை கேட்டவுடன், எனக்கு மியாவ் படத்தின் டிரைலரை பார்க்க வேண்டும் என்று  தோன்றியது..தயாரிப்பு துறையில் அடியெடுத்து  வைக்கும் வின்சென்ட் அடைக்கலராஜிற்கு இந்த மியாவ் படம் ஒரு சிறந்த அடிகல்… நிலையான தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் கால் பதிக்க தேவையான எல்லா சிறப்பம்சங்களும் அவருக்கு இருக்கின்றது…..அதற்கு இந்த மியாவ் திரைப்படம் ஒரு சிறந்த ஆரம்பம்….”
Share.

Comments are closed.