நகை பறிப்பை மையமாக கொண்ட ‘டியூக் டேவிட்’ குறும்படம்

0

 817 total views,  1 views today

untitled-1
இன்றைய காலக்கட்டத்தில், பெண்கள் தனியாக நடந்து செல்ல அஞ்சுகிறார்கள். அதற்கு காரணம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் நகை பறிப்பு தான். அத்தகைய குற்ற செயலை மையமாக கொண்டு தற்போது உருவாகி  இருக்கிறது,  ‘பெஞ்ச் பிளிக்ஸ்’ வழங்கி இருக்கும்  ‘டியூக் டேவிட்’ குறும்படம். வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கு சிறந்ததொரு அடித்தளமாக ‘பெஞ்ச் பிளிக்க்ஸ்’ நிறுவனம் விளங்குவது குறிப்பிடத்தக்கது.
“பைசல், சர்கியூட், பாண்டி ஆகிய மூவரும், இருசக்கர வாகனங்களில் சென்று நகை பறிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள். இந்த கும்பலுக்கு தலைவன்  ‘டியூக் டேவிட்’ . எங்கு, எப்படி நகை பறிக்க வேண்டும் என்பதை தெளிவாக திட்டம் போட்டு  அதை செயல்படுத்துவது தான் இந்த மூவரின் வேலை. ஆனால் இவர்கள் பறித்து வரும் நகைகள் அனைத்தும் ‘டியூக் டேவிட்டின் கட்டுப்பாட்டில், நவீன தொழில் நுட்ப பாதுகாப்போடு  தான் இருக்கும்.  ஒரு நாள், டேவிட் ரகசிய இடத்தில  பதுக்கி வைத்திருந்த நகைகள் அனைத்தும் காணாமல் போக, கூட்டத்தில் இருக்கும் எல்லோர் மீதும் சந்தேகம் பாய்கின்றது. பல குழப்பங்களுக்கு மத்தியில்  அந்த நகைகளை யார் எடுத்தார் என்பதை கண்டுபிடிப்பது தான் ‘டியூக் டேவிட்’ குறும்படத்தின் கதை.
 
Share.

Comments are closed.