நடிகர் அபி சரவணன் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம்!

0

 859 total views,  1 views today

images (3)

 

நடிகர் அபி சரவணன் விவசாயிகளுக்கு ஆதவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற   ‘விவசாயம் காக்க.. விவசாயியை காக்க’  எனும் ஒருநாள் அடையாள  உண்ணாவிரதப் போராட்டத்தில்  கலந்து கொண்டார்.
ஐல்லிக்கட்டு தடைக்கு எதிராக முதன்முதல் மெரினாவில் அமைதிப்பேரணி நடத்திய ‘கேர் அண்ட் வெல்பேர்’ அமைப்பு நடிகர் அபிசரவணனுடன் இணைந்து ‘விவசாயம் காக்க.. விவசாயியை காக்க’ டெல்லியில் போராடிய  விவசாயிகள் தலைமையில்,  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் அடையாள  உண்ணாவிரதப்  போராட்டத்தில்  ஈடுபடடனர்.
இதில்  ஏராளமான மாணவர்கள் இளைஞர்களுடன்  ‘சாயம்’ இயக்குனர் ஆண்டனி,  ‘பளஸ் ஆர் மைனஸ்’ இயக்குனர் ஜெய் யசோத், எடிட்டர் கோபி, கவிஞர் மதுரா மற்றும்  நடிகை ஐஸ்வர்யா ஆகியோர்  கலந்துகெணாடனர்.
போராட்டத்தில் ஒருங்கணைப்பாளர்கள் சிவா மற்றும் சிந்துராம், அபிசரவணன்  மற்றும் ஆம்ஆத்மி  சந்தரமோகன் போன்றோர் விவசாயிகளுக்கு ஆதவாக தங்கள் கருத்துக்களை தெரிவித்து பேசினார்.
மாலை ஐந்து மணிக்கு அனைவரும்  மோர் குடித்து உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்தனர்.
Share.

Comments are closed.