நடிகர் சிவகுமாரின் இரங்கல் செய்தி – டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம்

0

Loading

1. பெரியார் , ராஜாஜிக்கு பிறகு 95 வயது வரை புகழோடு வாழ்ந்த அகில இந்திய அரசியல் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.

2.பெரியார் – எந்த ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்துக்கு திட்டங்கள் தீட்டினாரோ அவற்றை கலைஞர் அவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்த உடனே நிறைவேற்றினார்.

3..அண்ணா அவர்கள் துவங்கிய திராவிட முன்னேற்ற கழகத்தை கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் கட்டிக்காத்தவர் .

4. அரசியலில் சாதித்ததற்கு இணையாக – கலை இலக்கியத்திலும் 60 ஆண்டுகளுக்கு மேல் சாதனை புரிந்தவர் .

5.1950 களில் தமிழ் சினிமாவில் நல்ல தமிழ் ஒலிக்க காரணமானவர்களில் முதன்மையானவர் .

6.குறளோவியம் , சங்கத்தமிழ், தொல்காப்பியப்பூங்கா – போன்றவை அவரது புலமைக்குச்சான்றானது .

7. பாசப்பறவைகள் , பாடாத தேனீக்கள் – அவர் வசனம் பேசி நடித்தேன் .

8. என் ஓவியங்களை பார்க்க 30 ஆண்டுகளுக்கு முன் எங்கள் இல்லம் வந்து 2 மணி நேரம் இருந்தார் .

9. சூர்யாவின் முதல் படம் நேருக்கு நேர் – கார்த்தி- முதல் படம் பருத்திவீரன் பார்த்து ஆசி கூறியவர் .

10.தமிழகத்தில் அவர் இடம் என்றும் காலியாகவே இருக்கும் .
அன்னாரது ஆத்மா சாந்தியடையவும் / பிரார்த்திப்பதோடு அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்.
# நடிகர் சிவகுமார்

Share.

Comments are closed.