நடிகர் ரவி ராகுலின் இயக்கத்தில் உருவான ‘களவாணி சிறுக்கி’

0

Loading

ராணா கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பில்  தொழிலதிபர் அம்மன் டெக்ஸ் ஆர்.நமச்சிவாயம் தயாரிக்கும் படம்  ‘களவாணி சிறுக்கி.’

இந்தப் படத்தில் சாமி, திவாகர், சங்கர் கணேஷ் மூவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக அஞ்சு கிரிட்டி அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் ஆர்.நமச்சிவாயம் நடிக்கிறார். வில்லனாக கெளரி சங்கர் அறிமுகமாகிறார். மற்றும் பல புதுமுகங்களும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – மோகன் டச், இசை – தருண் ஆண்டனி, பாடல்கள் – டாக்டர் கிருதியா, படத் தொகுப்பு – ராம்நாத், நடனம் – சிவகிருஷ்ணா, சண்டை இயக்கம் – டேஞ்சர் மணி, தயாரிப்பு மேற்பார்வை – என்.அபிமன்னன், தயாரிப்பு  – அம்மன் டெக்ஸ் ஆர்.நமச்சிவாயம், எழுத்து, இயக்கம் – ரவி ராகுல். இவர் ‘ஆத்தா உன் கோவிலிலே’, ‘மிட்டா மிராசு’, ‘தமிழ் பொண்ணு’, ‘மாங்கல்யம் தந்துனானே’ உட்பட ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்தவர். இவர் இயக்கும் மூன்றாவது படம் இது.

படம் பற்றி இயக்குநர் ரவி ராகுல் பேசும்போது, “ஒரு பெண் ஒரு ஆணிடம் பழகுறவிதம், நல்லவிதமாகவும் எடுத்துக் கொள்ளப்படும். அல்லது தவறான விதமாகவும் எடுத்துக் கொள்ளப்படும். அது அவரவர்கள் புரிந்து கொள்கிற மனப்பக்குவத்தை பொருத்தது.

கிராமத்தில் இருக்கிற பெண் ஒருத்தி ஒரு வாலிபனிடம் எதார்த்தமாக பழகுகிறாள். ஆனால் அதில் ஒருத்தன் அதை தவறாக நினைத்து அவளிடம் தப்பாக நடக்க முயல்கிறான். இறுதியில் அவன் நினைத்தது நடந்ததா, இல்லை என்ன பிரச்சனைகளை அவன் சந்தித்தான் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை…” என்றார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டி, கோத்தகிரி, பொள்ளாச்சி, ஈரோடு அதனை சுற்றி உள்ள இடங்களில் நடைபெற்றுள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில்  ஈரோட்டில் உள்ள சீனிவாசா திரையரங்கில் நடைபெற்றது. அதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இந்த விழாவில் கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார்.

Share.

Comments are closed.