‘நட்சத்திரங்களுடன் ஓர் நேரலை’ – ‘சட்னி சாட்’ நிகழ்ச்சியின் மூலம் அறிமுகப்படுத்துகிறது கல்ச்சர் மிஷினின் ‘புட் சட்னி’

0

Loading

jagan1
தென் இந்தியாவின் சிறந்த டிஜிட்டல் சேனலாக உருவாகி இருக்கும் ‘புட் சட்னியின்’ ரசிகர்கள் எண்ணிக்கை, பல லட்சங்களை தாண்டி போய் கொண்டிருக்கிறது. அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வண்ணமாக தற்போது ‘சட்னி சாட்’ என்னும் புதிய நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது ‘புட் சட்னி’. ‘அயன்’ படப்புகழ் ஜெகன் சிறப்பு விருந்தினராக பங்குபெறும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது தொகுப்பு இன்று மாலை வெளியாகிறது.

‘பேஸ்புக்’, ‘டிவிட்டர்’ போன்ற சமூக வலைத்தளங்கள் தற்போது அனைவர் மத்தியிலும் பிரபலமாக இருந்தாலும், அந்த சமூக வலைத்தளங்கள் உருவாக ஆரம்ப புள்ளியாக இன்றளவும் இருப்பது, நம் நாட்டில் இருக்கும் டீ கடைகள் தான். எந்த செய்தியாக இருந்தாலும், டீ கடைகளை தாண்டி தான் மற்றவர்களின் காதுக்கு போகும். அரசியல் முதல் விளையாட்டு வரை உள்ள அனைத்து செய்திகளும் விவாதிக்க படும் முதல் பேஸ்புக், டீ கடை.

‘சட்னி சாட்’ நிகழ்ச்சியின் மூன்றாவது தொகுப்பு, இந்த டீ கடைகளை சார்ந்து தான் இருக்கும். ராஜ்மோகன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், அஸ்வின் ராவ், வெங்கடேஷ் ஹரிநாதன் இணை தொகுப்பாளர்களாக பங்கேற்பதும், சோபியா மற்றும் அவரின் இசை குழுவினரின் சிறப்பு தோற்றமும் அடங்கி இருப்பது, ரசிகர்களை மேலும் மேலும் உற்சாகப்படுத்தும்.

ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் இரவு 8.30 முதல் 9 மணி வரை ‘புட் சட்னியின்’ யூ டூப் சேனலில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், பல்வேறு நட்சத்திரங்கள் வாரந்தோறும் சிறப்பு விருந்தினர்களாக பங்கு கொள்வது மேலும் சிறப்பு. 30 நிமிடங்களில் 15 நிமிடம் நிகழ்ச்சியும், 15 நிமிடம் சிறப்பு விருந்தினருடன் நடைபெறும் உரையாடலும் நேரலையாக ஒளிபரப்பாகும்.

சிறப்பு விருந்தினரை பற்றி:

பல தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் ஜெகன் புருஷோத்தமன் (ஜெகன் அயன்). கே வி ஆனந்தின் அயன் திரைப்படதில் நடித்த ‘சிட்டி’ கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் பாராட்டுகளை அதிகளவில் பெற்றவர். அதுமட்டுமன்றி, பல முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராகவும், விஜய் டி வியின் பிரபல ‘கனக்சன்’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். இதுவரை ஜெகன் 34 படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

புட் சட்னி பற்றி:

நகைச்சுவை காணொளிகளை கொண்டு ரசிகர்களை சிந்திக்க வைப்பது தான் புட் சட்னி சேனலின் முக்கிய குறிக்கோள். இந்த காணொளிகள் அனைத்தும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற, தற்போது தென் இந்தியாவின் சிறந்த டிஜிட்டல் – யூ டூப் சேனலாக உருவாகி இருக்கிறது ‘புட் சட்னி’.

Share.

Comments are closed.