நேமிசந்த் ஜபக் சார்பாக தயாரிப்பாளர் ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில், தாஸ் ராமசாமி இயக்கத்தில், நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘டோரா’.
விவேக் – மெர்வின் இசையமைப்பில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘எங்க போற டோரா’ மற்றும் ‘வாழ விடு’ ஆகிய பாடல்கள் தனித் தனி ட்ராக்காக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அடுத்து பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத் குரலில் ‘ரா ரா ரா’ எனும் பாடல் வெளியாக இருக்கிறது.
மிகவும் ஆக்ரோஷமான இந்தப் பாடல், தீய சக்திகளை நயன்தாரா எப்படி வெல்கிறார் என்ற காட்சியமைப்பில் உருவாகியிருக்கிறதாம்.
அனிருத்தின் வசீகரமான குரலும், நயன்தாரா பேசியுள்ள வசனங்களும் பாடலுக்கு வலு சேர்த்துள்ளதாகக் கூறுகிறார்கள்.
மேலும் புதிய முயற்சியாக ‘டோரா’ படத்தின் இசைத் தொகுப்பில் படத்தின் பிண்ணனி இசை மற்றும் தீம் மியூசிக் உள்ளிட்டவை இடம் பெற உள்ளதாம்.
‘டோரா’ படத்தின் இசை தொகுப்பினை சோனி மியூசிக் விரைவில் வெளியிடுகிறது.