நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ படத்திற்கு இசை அமைக்கிறார் ஜிப்ரான்

0

 1,441 total views,  1 views today

தன்னுடைய மனதை மயக்கும் இசையால், தமிழ் திரையுலகிலும், இசை பிரியர்கள் மத்தியிலும்  அமோக பாராட்டுகளை பெற்று வருபவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். தரமான கதைக்களங்களை தேர்வு செய்து, அந்த கதைக்களத்திற்கு தன்னுடைய இசையால் உயிர் கொடுக்கும் ஜிப்ரான், தற்போது நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடிக்கும் ‘அறம்’ திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். அறிமுக இயக்குநர் கோபி நயினார் இயக்கி,  ‘கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில்  கோட்டப்பாடி ஜே ராஜேஷ் தயாரித்து வரும் ‘அறம்’ திரைப்படம்,  வர்த்தக உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை  பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
“உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக விளங்கி கொண்டிருப்பது, தண்ணீர் பஞ்சம் தான். அத்தகைய வலுவான கதையம்சத்தை கையாளும் போது, நிச்சயமாக பாடல்களும், பின்னணி இசையின்  பங்கும் பெரியளவில் இருக்கும். எங்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக பூர்த்தி செய்ய கூடிய அந்த இசையமைப்பாளர் யார் என்பதை நாங்கள் யோசிக்கும் பொழுது, எங்கள் அனைவரின் எண்ணத்திலும் உதயமானது ஜிப்ரான் தான். நிச்சயமாக  இசை துறையில் அவர் பெற்று இருக்கும் அங்கீகாரம், எங்களின் ‘அறம்’ திரைப்படம் மூலம் மேலும் வலு பெறும்.” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘அறம்’ படத்தின் இயக்குநர் கோபி நயினார்.
Share.

Comments are closed.