நலன் குமாரசாமியின் ‘கல்யாணமும் கடந்து போகும்’

0

Loading

தமிழ் பொழுதுபோக்கு உலகில் எல்லையில்லா நிகழ்ச்சிகளை பெருமழை போல அள்ளி வழங்கும் காலம் இது. டிஜிட்டல் தளங்களின் சகாப்தம் அதன் பகுதிகளில் விரிவடைந்து வருவதால், ஒவ்வொரு தமிழ் ரசிகர்களிடமும் அது மிகவும் கவர்ச்சிகரமான அனுபவமாக மாறும். குறிப்பாக, Viu வின் முன்னோடி முயற்சிகள் நம்பமுடியாத அனுபவத்தை வெளிப்படுத்த இருக்கின்றன. அவற்றில் நிச்சயமான ஒன்று, சமகால பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் அதே  விஷயங்களை வழங்கும் ‘கல்யாணமும் கடந்து போகும்’ என்ற வலைத்தொடர். கல்யாணமும் கடந்து போகும் தொடர், பார்வையாளர்களை முழுமையாக ஈர்க்கும் என நான் நிச்சயமாக நம்புகிறேன்” என்கிறார் பின்றோம் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் சமீர். 
 
தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சாவூர், சேலம், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இந்த கதை பல்வேறு இடங்களின் பின்னணியில் உள்ள, திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் பல்வேறு சமுதாய மக்களின் வாழ்வில் பயணிக்கும். ஒவ்வொரு அத்தியாயமும் வித்தியாசமான கதையைக் கொண்டிருக்கும், மற்றொன்றுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். ஆனால் வெவ்வேறு காரணங்களுக்காக திருமணம் செய்து கொள்ள, ஒவ்வொரு கதாபாத்திரமும் முயற்சிக்கும் ஒரு பொதுவான தோற்றம் இருக்கும். அது ஒரு யதார்த்தமான அணுகுமுறையில், அதே நேரத்தில் கிண்டல் பாணியில் சொல்லப்பட்டிருக்கும்” என்கிறார் சமீர்.
 
இந்த அற்புதமான மற்றும் நகைச்சுவை  வலைத்தொடருக்கு  Viu போன்ற ஒரு பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று ‘பின்றோம் பிக்சர்ஸ்’ பங்குதாரர் மற்றும் இயக்குனர் நலன் குமாரசாமி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

 

Share.

Comments are closed.