நிவின் பாலி நயன்தாரா ஜோடி நடிக்கும் ‘லவ்,ஆக்ஷன், ரொமான்ஸ் ‘

0

Loading

IMG_4388-09-07-17-02-58
மலையாள சினிமாவின் ஜாம்பவானான ஸ்ரீனிவாசனின் மூத்த மகன் வினீத் ஏற்கனவே இயக்குனராகி மாபெரும் வெற்றிகளை கொடுத்து வருகிறார். ஸ்ரீனிவாசனின் அடுத்த மகனான தியன் ஸ்ரீநிவாசன் தற்பொழுது இயக்குனராக அறிமுகமாக உள்ளார். ஸ்ரீனிவாசனின்மா, பெரும் வெற்றி பெற்று இன்று வரை கொண்டாடப்படும் படமான ‘வடக்குநோக்கியந்த்ரம்’ படத்தை இந்த தலைமுறைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து இயக்க உள்ளார் தியன் ஸ்ரீனிவாசன். இப்படத்திற்கு ‘லவ்,ஆக்ஷன், ரொமான்ஸ் ‘ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாகவும் , அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.
இது குறித்து தியன் ஸ்ரீனிவாசன் பேசுகையில், ” காலங்களை தாண்டி  இன்று வரை ரசிக்கப்பட்டு கொண்டாடப்படும் படம் ‘வடக்குநோக்கியந்த்ரம்’. அதில் அப்பா நடித்திருந்த ‘தினேசன்’ கதாபாத்திரம் யாராலும்  மறக்க முடியாதது.அந்த கதையையும்  , தினேசன் கதாபாத்திரத்தையும் எனது முதல் படத்திலேயே இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி. வடக்குநோக்கியந்த்ரத்தின் சாரத்தை மட்டுமே எடுத்து, சில மாற்றங்கள் செய்து  அதை இந்த தலைமுறைக்கேற்ப தர உள்ளேன். நிவினும் நயன்தாராவும் இப்படத்தின் தூண்கள் .இந்த காதல் – காமெடி படத்தில் அஜூ வர்கஹீஸ் ஒரு முக்கி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பை  துவங்க உள்ளோம் . இப்படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைக்க உள்ளார் . விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்யவுள்ளார். இது எனக்கு முதல் படமாக இருந்தாலும், நயன்தாராவை தவிர  இப்படத்தில் பணியாற்ற உள்ள எல்லா நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்,  நான் ஏற்கனவே பணியாற்றி உள்ளதால் , எந்த விதமான பதற்றமில்லாமல் என்னால் செயல்படமுடியும் ”
Share.

Comments are closed.