Friday, December 13

படைப்புகள் சமூக அக்கறையோடு இருக்க வேண்டும் – எழுவாய் தமிழா ஆல்பம் இயக்குனர் காளிங்கன்

Loading

முகவை பிலிம்ஸ் சார்பில் அங்கையற்கண்ணன் தயாரிப்பில், காளிங்கன்  இயக்கத்தில்  ‘எழுவாய் தமிழா’ என்ற  இசை ஆல்பம்  உருவாகி உள்ளது.  இதனை பற்றி இயக்குனர் காளிங்கன்  கூறியதாவது:

நான் இயக்குனர் அகமத் மற்றும் கௌதம் ராமச்சந்திரன் இயக்கிய ‘ரிச்சி’ படத்தில்  இணை இயக்குனராக பணியாற்றியுள்ளேன்.

எனக்கு  என் படைப்புகள் எப்போதும் ஒரு சமூக அக்கறையோடு இருக்க வேண்டும் என்று எண்ணுவேன். அதே எண்ணத்தோடு வந்தவர் தான் தயாரிப்பாளர் அங்கையற்கண்ணன். நாங்கள்  இருவரும் சேர்ந்து முடிவெடுத்து உருவானது தான் இந்த ஆல்பம் .

ஆம்… தமிழ் நம் அடையாளம், நம் பண்பாடு, தமிழ்  எங்கள் தாய் மொழி என்று உரக்க சொல்லும் நேரமிது. அன்னிய மொழி மோகம் நம்மை தொற்ற தொடங்கி விட்டது.  எனவே எல்லோருடைய தமிழ் பற்றையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. தமிழில் படிக்கவும், எழுதவும் நம் இளைய சமுதாயம் தடுமாறிக் கொண்டிருக்கு, அதற்கு வழிகாட்டும் பொறுப்பு நமக்கு உள்ளது,

தெருவை சுத்தம் செய்ய குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவது போல், தமிழில் கலந்துள்ள பிற மொழி குப்பைகளை அகற்ற வேண்டும். அதற்காக நாம் அனைவரும்
தூய தமிழில் பேசவும் எழுதவும் உறுதி எடுப்போம். நம் தமிழ் மொழியை மேலும் வளர  செய்வோம்.

இதற்கான ஒரு சிறு முயற்சி தான் இந்த எழுவாய் தமிழா  ஆல்பம் என்றார்.

மேலும்  இதில்  அழகான பாடல்களை தந்த ரேஷ்மன் அதற்கு இசையமைத்த நவின் சங்கர், பாடலுக்கு ஆடிய சஞ்சய்,   ஒளிப்பதிவாளர் சௌ.பாண்டி குமார் மற்றும் நடன இயக்குனர் சந்தோஷ்  ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.​