படைவீரன் படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ்

0

 272 total views,  1 views today

இவோக் சார்பாக மதிவாணன் தயாரிப்பில் பாரதிராஜா மற்றும் விஜய் யேசுதாஸ் நடித்து மணிரத்னம் உதவியாளர் தனா இயக்கும் படைவீரன் படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

முன்னதாக படைவீரன் படத்தை பிரத்தியேகமாக தனுஷிற்காக படக்குழுவினர் போட்டுக் காட்டியுள்ளனர். படம் தனுஷிற்கு மிகவும் பிடித்திருந்ததால் அவர் படைவீரன் படத்திற்காக கார்த்திக் ராஜா இசையில், ப்ரியன் வரிகளில் உருவான “லோக்கல் சரக்கா பாரின் சரக்கா… ஊத்திக்குடிச்சா எல்லாம் ஒன்னுடா… ” எனத் தொடங்கும் பாடலை தனுஷ் பாடி கொடுக்க, படம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தனுஷ் பாடிய பாடலை காட்சிப்படுத்தி படக்குழுவினர் படத்தை நிறைவு செய்துள்ளனர்.

படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ் பாடல் படமாக்கப்பட்ட விதத்தை மிகவும் பாராட்டினார்படைவீரன் படம் டிசம்பரில் வெளியாகிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு – மதிவாணன்

கதைதிரைக்கதைவசனம்இயக்கம் – தனா

இசை – கார்த்திக் ராஜா

ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன்

படத்தொகுப்பு – புவன் ஶ்ரீனிவாசன்

கலை இயக்குநர் – சதிஷ் குமார்

பாடல் – தனாப்ரியன்மோகன்ராஜன்

நடனம் – விஜீ சதிஷ்

சண்டை பயிற்சி – தில் தளபதி

நிர்வாக தயாரிப்பாளர் – விஜய்பாலாஜி

மக்கள் தொடர்பு – நிகில்

Share.

Comments are closed.