“பண்டிகை” யை கொண்டாடும் ஆரா சினிமாஸ்.

0

 912 total views,  1 views today

கடந்த 14ஆம் தேதி வெளி ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் “பண்டிகை” கிருஷ்ணா- ஆனந்தி நடிக்க, புதிய இயக்குனர் பெரோஸ் இயக்க, Tea time talks என்கிற நிறுவனத்தின் சார்பில் விஜயலட்சுமி தயாரித்து உள்ளார். இந்தப் படத்தை ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ்  வெளியிட்டு இருக்கிறார். இருமுகன், தேவி, சைத்தான், ஆகிய வெற்றி படங்களை வெளியிட்டு  உள்ள ஆரா சினிமாஸ், தங்களது வெற்றி பயணத்தில் இன்னொரு மகுடமாக “பண்டிகை” படத்தையும் சேர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
” திரை உலகம் தற்போது மிகவும் சவாலான சோதனைகளை சந்தித்துக் கொண்டு இருக்கிறது.  இந்த நேரத்தில் பண்டிகை படத்தின் வெற்றி ஒரு ஒளிக்கீற்றாக வந்து இருக்கிறது. இது வரை கண்டிராத ஒரு கதைகளத்தில் மிக அருமையாக கதையை சொன்ன விதத்தில்   இயக்குனர்  பெரோஸ் தமிழ் திரை உலகின் மிக சிறந்த எதிர்கால இயக்குனர்களில் ஒருவராக திகழ்வார் என்பதில் ஐயமில்லை. அவருடைய கடின உழைப்பும் , திறமையும் தான் இந்த வெற்றிக்கு அடித்தளம்.225 காட்சிகளுடன்  ஆரம்பித்தோம். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு  காரணமாக இப்போது காட்சிகள் கூட இருக்கிறது.இந்த வெற்றியை ரசிகர்களின் நாடி துடிப்பை உள்ளங்கை நெல்லி கனியாய் அறிந்து வைத்து இருக்கும் இன்றைய இளம் இயக்குனர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.எங்களது நிறுவனமான ஆரா சினிமாஸ் தமிழ் திரை உலகம் பெருமை கொள்ளும் தரமான படங்களை தொடர்ந்து வழங்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்”  என்கிறார் ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ்.
Share.

Comments are closed.