பத்மவிபூஷண் விருதுக்கு இளையராஜாவால் கௌரவம்

0

 165 total views,  1 views today

 பாரத ரத்னாவுக்கு அடுத்த பெரிய விருது பத்மவிபூஷண்.
    68 ஆண்டுகளில் 100 பேர் இந்த விருது வாங்கியிருந்தால் அதிகம்.
       ராகதேவன் இளையராஜாவுக்கு
அந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இல்லை.
      அந்த விருதுக்கு ராஜாவால்
கௌரவம் கிடைத்துள்ளது.
      பஞ்சு அருணாசலம் அவர்களால்
‘அன்னக்கிளி’- படத்தின் மூலம்
தமிழ் திரையுலகுக்கு கிடைத்த புதையல் அவர்.
     அப்படத்தின் கதாநாயகனாக  நான் நடித்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
       50-க்கும் மேற்பட்ட எனது படங்களுக்கு இசையமைத்து
படங்களின் வெற்றிக்கு ஆணிவேராக
இருந்திருக்கிறார் .
      எனது 100-வது படம் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி ‘-‘ சிந்துபைரவி ‘-
படங்களின் வெற்றியில் பெரும் பங்கு அவருடையது.
      தன் வாழ்நாளை இசைக்காகவே
அர்ப்பணித்த அபூர்வ கலைஞர்.
   அவரால் கலையுலகும் தமிழகமும்
இந்த விருது மூலம் கௌரவிக்கப் பட்டிருக்கிறது.
   எத்தனை விருதுகள் கொடுத்தாலும்
அவர் இசையுலகில் சாதித்ததற்கு
அவை ஈடாக முடியாது.
வாழ்க இசைஞானி .
ஓங்குக அவர் புகழ் !!
⁃சிவகுமார்
⁃திரைப்படக்கலைஞர்

Share.

Comments are closed.

CLOSE
CLOSE