‘பலூன்’ படத்தின் ‘போஸ்டர்களை ஐந்து முன்னணி கதாநாயகர்கள் வெளியிடுகின்றனர்

0

 1,481 total views,  1 views today

ஒரு படத்தின்  விளம்பர பணிகளில், தமிழ் கதாநாயகர்கள் அனைவரும்  ஒருத்தருக்கு ஒருத்தர் நட்பின் அடிப்படையில்  உதவியாக இருந்து வருகின்றனர்.  அந்த வகையில், தற்போது  ஜெய் – அஞ்சலி – ஜனனி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும்   ‘பலூன்’ திரைப்படத்தின் ஐந்து போஸ்டர்களை, தமிழ் திரையுலகை  சார்ந்த ஐந்து முன்னணி நட்சத்திர கதாநாயகர்கள் வெளியிட இருப்பது மேலும் சிறப்பு.  ’70 எம் எம்’ நிறுவனத்தின் சார்பில்  டி.என். அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில்  திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து  தயாரித்து இருக்கும்   இந்த  ‘பலூன்’ படத்தை சினிஷ் இயக்கி இருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகி இருக்கும் ‘பலூன்’  படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
“எங்கள் பலூன் படத்தின் முதல் போஸ்டரை பிப்ரவரி 15 ஆம் தேதியும், இரண்டாம் போஸ்டரை பிப்ரவரி  16 ஆம் தேதியும், மூன்றாம் போஸ்டரை 17 ஆம் தேதியும், நான்காம் போஸ்டரை 18 ஆம் தேதியும், இறுதியாக படத்தின் டீசரை பற்றிய ஐந்தாம் போஸ்டரை பிப்ரவரி 19 ஆம் தேதி அன்றும் வெளியிட முடிவு செய்துள்ளோம். இந்த ஐந்து போஸ்டர்களையும், தமிழ் திரையுலகை சார்ந்த ஐந்து முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட இருக்கின்றனர். நிச்சயமாக அவர்கள் மூலம், எங்களின் ‘பலூன்’  மேலும் மேலும் உயர பறக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் சினிஷ்.
Share.

Comments are closed.