பவன் கல்யாணுடன் இணையும் ஸ்ருதி ஹாசன் .

0

Loading

acs_1064
தமிழில்  அஜித் குமார் மற்றும் தமன்னா நடிப்பில் சிவா இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்ற ‘வீரம்’ தற்போது கட்டமா ராயுடு என்ற பெயரில் தெலுங்கில் தயாராவது தெரிந்ததே. இந்தப் படத்தில் பவன் கல்யாணுக்கு இணையாக சுருதி ஹாசன் நடித்து வருகிறார். பெரும் வெற்றி  பெற்ற  கப்பார் சிங் படத்தை தொடர்ந்து இந்த ஜோடியின் இரண்டாம் படம் இது.துரித வேகத்தில் படமாக்க பட்ட இந்தப் படம் இப்பொழுது முடியும் தருவாயில் உள்ளது.பொள்ளாச்சியை தொடர்ந்து இப்பொழுது ஹைதராபாதில் படப்பிடிப்பு  தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
பவன் கல்யாணுடன் ஸ்ருதி ஹாசன் நடித்த பாடல் காட்சி பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்த போது  ஆரவாரம் ஒரு தமிழ் படத்துக்கு இணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வருகின்ற தெலுங்கு வருட பிறப்பு அன்று வெளி இடப படும் இந்தப் படம்  ஸ்ருதி  ஹாசனை தென்னிந்திய திரை உலகில்  மேலும்  உச்சத்தில் உயர்த்தி செல்லும் என்று எதிர்ப்பார்க்க படுகிறது.தயாரிப்பு ஷரத் மார், இயக்கம் கிஷோர் பர்தசானி.
Share.

Comments are closed.