‘பாசஞ்சர்ஸ்’ படத்தின் கலை நுணுக்கங்களும், அதன் அற்புதமும்

0

Loading

920f6f67-823e-476b-810e-433140a3ac06
ஒரு திரைப்படத்தின் காட்சிகளுக்கு உயிர் அளிக்க கூடியது, அந்த படத்தின் கலை இயக்கம் தான். அந்த வகையில் கிறிஸ் பிராட் மற்றும் ஜெனிபர் லாரன்ஸ் நடித்திருக்கும் ‘பாசஞ்சர்ஸ்’ திரைப்படதின் கலை இயக்கம், காண்போரை  வியப்பில் ஆழ்த்த செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. விண்வெளி கப்பலை ரசிகர்களின் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்த, ‘பாசஞ்சர்ஸ்’ படக்குழுவினர் எடுத்து இருக்கும் கடின  முயற்சிகள் யாவும் சவாலானது என்பதை எந்தவித  சந்தேகமுமின்றி சொல்லலாம்.
‘பாசஞ்சர்ஸ்’ படத்தின் மைய கருத்தே, ‘கால பயணம்’ தான். எனவே அதற்கு தேவையான, அறிவியல் சார்ந்த கருவிகளின் மாதிரியை உருவாக்குவதில் அதிகளவு கவனம் செலுத்தி உள்ளனர். விண்வெளி கப்பலில் காணப்படும்  ‘ஹைபர்நேஷன் பே’ என்கின்ற பகுதியின் மாதிரி, சுமார் 22,800 சதுரடி கொண்டது. இதனை வெறும் ஒன்பது வாரத்தில் பிரமிப்பூட்டும் விதத்தில் செய்து முடித்திருக்கின்றனர், ‘பாசஞ்சர்ஸ்’ படக்குழுவினர். ‘அவலோன்’ எனப்படும் மாதிரி விண்வெளி கப்பலில், சுமார் 1800 சதுரடி பரப்பளவில் ஆடம்பரமான அறைகள், உணவு அறை, ஓய்வு அறை என இரண்டு அடுக்கில் மிக பிரம்மாண்டமாக  அமைத்துள்ளனர். “வியன்னா அறைகளின் தனித்துவமான சிறப்பே, அதனுடைய கண்கவரும் அழகு தான்” என்கின்றார் புரொடக்ஷன் டிசைனர் கய் ஹென்றிக்ஸ்
“ஐந்து துறைகளின் கடின உழைப்பில் இதை நாங்கள் உருவாக்கி இருக்கின்றோம். வேலை என்பதை தாண்டி அனைவரின் அன்பில் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த விண்வெளி கப்பல். படத்தொகுப்பு வேலைகள் முழுவதுமாக  முடிந்த பின் நாங்கள் ‘பாசஞ்சர்ஸ்’ படத்தின் காட்சிகளை பார்த்தோம். அப்போது  எங்களின் உழைப்பு முழுமையாக நிறைவு பெற்று இருப்பதை உணர்ந்து அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்தோம்.” என்கின்றார்
இந்தியா முழுவதும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில், 3 டி தொழில் நுட்பத்தில் வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதி அன்று ‘பாசஞ்சர்ஸ்’ திரைப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
 
 
Share.

Comments are closed.