பாம்பு சட்டை

0

Loading

f4df364a-6af7-4085-a9ba-6808d1bc5878
‘பாம்பு சட்டை’ படத்தின் டீசரை நாளை வெளியிடுகிறார் விஷால்

ஒரு திரைப்படத்தை எப்படி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற யுக்தியை நன்கு அறிந்தவர் தயாரிப்பாளர் – இயக்குநர் – நடிகர் மனோபாலா. திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களோடு அவர் வைத்திருக்கும் நட்புறவு, அவருடைய வெற்றிக்கு உறுதுணையாய் இருந்து வருகிறது என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லலாம். அவருடைய தயாரிப்பில் உருவாகி, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் ‘பாம்பு சட்டை’ திரைப்படத்தின் விளம்பர பணிகள் தற்போது முழு வீச்சில் துவங்கி உள்ளது. அறிமுக இயக்குநர் ஆடம் தாசன் இயக்கி, பாபி சிம்ஹா – கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கும் பாம்பு சட்டை படத்தின் டீசரை நவம்பர் 9 ஆம் தேதி (நாளை) வெளியிடுகிறார் நடிகர் விஷால். ‘பாம்பு சட்டை’ படத்தின் விநியோக உரிமையை வாங்கி இருக்கும் ‘சினிமா சிட்டி’ கே கங்காதரனோடு இணைந்து, அபி & அபி நிறுவனத்தின் நிறுவனர் திரு அபினேஷ் இளங்கோவன் இந்த படத்தை வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

“பாம்பு சட்டை படத்தின் டீசரை உங்களால் வெளியிட முடியுமா என்று நான் விஷாலிடம் கேட்ட அடுத்த நொடியே, எந்தவித யோசனையும் இன்றி அவர் சம்மதம் தெரிவித்துவிட்டார்…. இல்லை என்று வருபவர்களுக்கு துணிச்சலோடு உதவுவது மட்டுமின்றி, அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்வது தான் விஷாலின் சிறப்பம்சம். அதனால் தான் அவர் தொடும் எல்லா செயல்களும் வெற்றியில் முடிவடைகிறது….அந்த வகையில் எங்களின் பாம்பு சட்டை படத்தின் டீசரை விஷால் வெளியிடுவது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. வலுவான கதைக்களம், சிறந்த கலைஞர்கள்….. இவை இரண்டும் எங்கள் ‘பாம்பு சட்டை’ படத்தின் டீசரை வெற்றி பாதையில் பயணிக்க செய்யும்…வெற்றி என்னும் மகுடத்தை சூட நாங்கள் எடுத்து வைத்திருக்கும் முதல் அடி, ‘பாம்பு சட்டை’ டீசர்….இதை வெற்றியின் நாயகனாக திகழும் விஷால் வெளியிடுவது எங்களுக்கு மேலும் பலம். இந்த வருட இறுதியில் நாங்கள் ‘பாம்பு சட்டை’ திரைப்படத்தை வெளியிட இருக்கிறோம்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் மனோபாலா.

Share.

Comments are closed.