கிராமத்தில் மகிழ்சியாக சுற்றித்திரியும் மூன்று இளைஞர்கள் விளையாட்டாய் ஒரு தவறு செய்கின்றனர்.அதற்கான தண்டணையை அனுபவிக்க காவல்நிலையம் செல்கின்றனர்.
காவல்நிலையத்திலுள்ள அதிகாரி இவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக கேட்கிறார்.இவர்கள் மறுக்கவே, அவர் மிரட்டுகிறார்.இதனால் தங்களை காப்பாற்றிக்கொள்ள கெட்ட வழியில் ஈடுபட்டு பணத்தை தருகின்றனர்.
ருசிகண்ட பூனைப்போல தீயசெயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறனர்.ஒருகட்டத்தில் சமூக விரோதிகளாகவே மாறிப்போகிறானர்.
இறுதியில் அவர்கள் வாழ்க்கை மீண்டதா? இவர்களின் வாழ்வை திசைதிருப்பிய அந்த அதிகாரி என்னவானார் ?என்பதையும் ,ஒரு சிறுதவறு அவர்களை எப்படி திசைமாற்றியது என்பதையும் விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்லப்பட்டுள்ளது.
படபிடிப்பு கும்பகோணத்தின் சுற்றுவட்டார பகுதிகளிலும் சென்னையிலும் சுட்டெறிக்கும் வெப்பத்தையும் (100°F) பொருட்படுத்தாமல் படம்பிடித்துள்ளனர் படக்குழுவினர்.