1,099 total views, 1 views today
வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன்,கே.எஸ்.சிவராமன் தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை தயாரித்து வருகிறார்கள் அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதை தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் “ ஓடி ஓடி உழைக்கனும் “ படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது….இதை தொடர்ந்து பிரபுதேவா நாயகனாக நடிக்கும் “ எங் மங் சங் “ படத்தையும் தயாரிக்கிறார்கள். தேவி வெற்றிப் படத்திற்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது..
இந்த படத்தில் தங்கர்பச்சான் முக்கிய வேடம் ஏற்கிறார்..மற்றும் R.j. பாலாஜி ,பாகுபலி பிரபாகர் கலக்கேயா ,சித்ராலட்சுமணன் கும்கி அஸ்வின் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கதாநாயகி மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
ஒளிப்பதிவு – ஆர்.பி.குருதேவ் ( இவர் காஞ்சனா 2, யோகி போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர்.
இசை – அம்ரீஷ் ..இவர் விரைவில் வர உள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு இசை அமைத்துள்ளார்
கலை – ராஜன்.D
தயாரிப்பு மேற்பார்வை…ஆர்.பி.பாலகோபி
தயாரிப்பு – கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன்,
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எம்.எஸ்.அர்ஜுன்.
இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.
படப்பிடிப்பு இம்மாதம் துவங்க உள்ளது