பிரபு தேவா நடனம் அமைத்த ”டேம் டேம் ” பாடல்

0

 894 total views,  1 views today

IMG_0225
வனமகன் பட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது தெரிந்த விஷயமே . தற்பொழுது இப்படத்தின் ”டேம் டேம் ” மற்றும் ”யம்மா யே அழகம்மா” பாடல்களின் வீடியோவும் வெளியிடப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது .  பாடல்கள் படமாக்குவதில் தனி கவனம் செலுத்தும் இயக்குனர் விஜய் அவர்கள் இப்படத்திலும் அதனை மிக அழகாக செய்துள்ளார். ”டேம் டேம் ” பாடலிற்கு  ‘இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்’ பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார். அவருக்கே உரித்தான வியக்கத்தக்க பாணியில் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் . அதற்கு கதாநாயகி சயீஷாவும் தனது அபாரமான நடனத்தின் மூலம் ஈடுகொடுத்துள்ளார். இசை மற்றும் நடன ரசிகர்களுக்கு இப்படல் ஒரு விருந்தாகும் .
”யம்மா யே அழகம்மா” பாடலின் மூலம் ஹாரிஸ் ஜெயராஜ் -பாம்பே ஜெயஸ்ரீ கூட்டணி மற்றும் ஒரு ஹிட் பாடலை தந்துள்ளது . மனதை வருடும் மெலடி -பிருந்தா மாஸ்டரின் சிறந்த நடனமைப்பு – திரு அவர்களின் அழகான ஒளிப்பதிவு – இப்படத்தில் தனது அர்பணிப்பால்  எல்லோரையில் வியக்கவைத்த ஜெயம் ரவி மற்றும் தமிழ் ரசிகர்களை ஏற்கனவே ஈர்க்கும் சயீஷாவின்  தேர்ந்த நடனமே இப்பாடலை ரசிகர் மத்தியில் கொண்டாட வைத்திருக்கிறது . ஜூன் 23 அன்று வெளியாகவுள்ள வனமகனிற்கு இப்பாடல்கள் மூலம் மேலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது .
Share.

Comments are closed.