பிரமாண்டமாக நடைபெறும் லிப்ரா குறும்பட விழா..!

0

Loading

நளனும் நந்தினியும்சுட்ட கதை, நட்புன்னா என்னான்னு தெரியுமா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள லிப்ரா புரடக்சன்ஸ் நிறுவனம்தற்போது குறும்பட இயக்குனர்களின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக குறும்பட போட்டி ஒன்றை மிக பிரமாண்டமாக நடத்த இருக்கிறது.

இந்த குறும்பட போட்டியில் கலந்துகொள்ள போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்புமாறு கடந்த ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது லிப்ரா புரடக்சன்ஸ். அந்தவிதமாக போட்டிக்கு வந்த 946 படங்களில் இருந்து சிறந்த 53 குறும்படங்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தேர்வு செய்யப்பட்டுள்ள சிறந்த 53 குறும்படங்கள்

1. Gangs of 47

2. Koorpi

3. Karmachakram

4. All ilatha Roobam

5. Mutham

6. The Ring

7. The Affair

8. Vanam

9. Thirantha Puthagam

10. Kadan

11. Naan 8

12. Savadaal

13. Nil

14. Thamizhachi

15. Theerathu

16. Yeman

17. Rays of hope

18. kannuku iniyal

19. Pitchai Pathiram

20. Madharassi

21. Jillunu oru kalavaram

22. L Board

23. Tiffen Box

24. Koorvazh

25. Ippadiku Vivasayee

26. Abaya

27. Kuva Kuva

28. Pen Paal

29. Thalai Vanankathe thamizha

30. Back Bone

31. kaliyugam

32. Salt

33. Pagal Natchathiram

34. Mayakkanadi

35. Iruthi Aram

36. Manidham Enge

37. Ninaivugal

38. In the Orb of Night

39. 93* not out

40. Solomon My Father

41. Kalavu

42. Giant Wheel

43. Loyalty

44. 18 Sticks

45. Vacha kuri Thappadhu

46. Kayal

47. Kavarimaan

48. Chilra Illa Papa

49. Adiye Azhage

50. Enga Vettu Pillai

51. Vidiyattum eni

52. Yatchi

53. Ippadiku Police

இந்த 53 குறும்படங்களையும் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள்தொழிநுட்ப கலைஞர்கள் கொண்ட குழு பரிசீலித்து அதில் சிறந்த பத்து குறும்படங்களை தேர்ந்தெடுப்பார்கள்.. மிகச்சிறந்த குறும்படம் என்கிற ஒரு பிரிவில் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த குறும்பட இயக்குனர்நடிகர்நடிகை,  இசை யமைப்பாளர்ஒளிப்பதிவாளர்படத் தொகுப்பாளர்பாடலாசிரியர்பா டகர் என இந்த 53 குறும்படங்களில் இருந்தே பல பிரிவுகளிலும் போட்டியாளர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்..

இந்த விருது வழங்கும் விழா வரும் நவ-19ஆம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள், முதல் பத்து பரிசுகளுக்கு தகுதியான குறும்படங்கள் பற்றிய விபரங்கள் அன்றைய தினம் விழா மேடையில் வைத்து அறிவிக்கப்படும்.

 

முதல் பரிசாக 10 லட்சம்2ஆம் பரிசாக 7 லட்சம் மற்றும் 3ஆம் பரிசாக 5 லட்சம் ரூபாய் என பரிசு தொகைகள் வழங்கப்பட இருக்கின்றன. இதில் இன்னொரு சிறப்பு அம்சமாக மீதி உள்ள ஏழு குறும்படங்களுக்கும் சிறப்பு பரிசாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

 

இந்த விழாவை தொடர்ந்து நடத்துவது குறித்து லிப்ரா புரடக்சன்ஸ் ரவீந்தர சந்திரசேகரன் கூறுகையில், “குறும்பட விழாக்கள் நடத்துறது ஒரு சேவை மட்டுமல்ல.. இதுக்கு வர்த்தக ரீதியா ஒரு ஓப்பனிங் இருக்குது.. அதேசமயம் பணம்லாபம் அப்படிங்கிறத தாண்டி இந்த குறும்பட விழா மூலமா திரையுலகுக்கு நிறைய டெக்னீசியன்களை அறிமுகப்படுத்துறோம்..

என்னால எல்லோருக்கும் படம் கொடுக்க முடியாது.. ஆனா அவங்களுக்கு படம் கிடைக்கிறதுக்கான வாய்ப்பையும் அவங்களுக்கான பாராட்டையும் ஏற்படுத்தி தரமுடியும்.. நாளைக்கு அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அங்கே லிப்ரா விருது வாங்கிருக்கேன்னு அவங்க அதை ஒரு அங்கீகாரமா சொல்லுவாங்கள்ல.. வருங்காலத்துல லிப்ரா அவார்ட்ஸ் அப்படின்னா திரையுலகத்துல மிக மரியாதையான ஒரு விஷயமா மாறனும்.. இதுதான் இந்த குறும்பட விருது விழா நடத்துறதோட நோக்கம்.” என்கிறார் தெள்ளத்தெளிவாக.

Share.

Comments are closed.