பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “

0

Loading

பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “ 
( படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை என்பதால் சூர்யா நடிக்கும் 36வது திரைப்படம் சூர்யா36 என்று அழைக்கப்படுகிறது ) திரைப்படம் ! 
சூர்யா நடிப்பில் , செல்வாராகவன் இயக்கத்தில் , ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R. பிரகாஷ் பாபு , S.R.பிரபு தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் “ சூர்யா 36 “. இப்படத்தின் படபிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படத்தின் முதல்கட்ட படபிடிப்பும் ,பாடல் பதிவும் நிறைவடைந்துவிட்டது. விரைவில் துவங்கவுள்ள இரண்டாம் கட்ட படபிடிப்புக்கு படக்குழு தற்போது தயாராகி வருகிறது. படத்துக்காக 3கோடி ரூபாய் பொருட்செலவில் அம்பாசமுத்திரம் நகரத்தை போன்ற மிகபிரமாண்டமான செட் ஒன்று சென்னையில் இரவு – பகலாக உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆர்ட் டிபார்ட்மென்டை சேர்ந்த 220க்கும் மேற்பட்டவர்கள் இதற்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள். படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு இந்த செட்டில் 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து அடுத்தகட்ட படபிடிப்பு நடைபெறும். சூர்யா 36 திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் , சாய் பல்லவி மற்றும் முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு சிவகுமார் விஜயன் , கலை R.K.விஜயமுருகன் , படத்தொகுப்பு G.K.பிரசன்னா , சண்டை பயிற்சி சாம்.
Share.

Comments are closed.