பிிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படம்

0

 937 total views,  1 views today

IMG_2505
மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற “மகேஷிண்டே பிரதிகரம்”  தற்போது தமிழில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் , உதயநிதி ஸ்டாலின் கதா நாயகனாக  நடிக்க, மூன் ஷாட் என்டேர்டைன்மெண்ட் என்கிற புதிய பட நிறுவனத்தின் சார்பில்  தயாராகிறது. இரண்டு தேசிய விருதுகள், ஐந்து மாநில விருதுகள், இரண்டு film fare விருதுகள் மற்றும் பல்வேறு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் விருதுகள் வென்ற “மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்துக்கு தமிழில் இன்னும் பெயர் சூட்டவில்லை என்பதுக் குறிப்பிட தக்கது. உதயநிதியுடன் பார்வதி நாயர் மற்றும் பிரபல மலையாள நடிகை நமீதா பிரமோத் ஆகியோர் நாயகிகளாக  நடிக்க இவர்களுடன் சமுத்திரகனி, எம் எஸ்  பாஸ்கர், மற்றும் கருணாகரன் நடிக்க உள்ளனர். சமுத்திர கனி வசனம் இயற்ற, டர்புக சிவா இசை அமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய உருவாகும் இந்தப் படத்தின் துவக்க விழா, சென்னையில் four frames ஒலிப்பதிவு கூடத்தில் நடந்தது.  வருகின்ற 19 ஆம் தேதி எழில் கொஞ்சும் குற்றாலம், தென்காசி ஆகிய  இடங்களில் தொடர்ந்து  நடை பெற உள்ளது. 
 
 இயக்குனர் பிரியதர்ஷனும், உதயநிதியும் இணைந்து பணியாற்றும் முதல் படமான , இத்திரைப்படம்  மிகவும் எதிர்பார்க்க படும் படமாக உருவாகும் என்பதில் ஐயமில்லை.
 
Share.

Comments are closed.