929 total views, 1 views today
சலீம் மற்றும் தர்மதுரை வெற்றி படங்களை தயாரித்தும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணொம், சூது கவ்வும், தங்க மீன்கள், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல வெற்றி படங்களை விநியோகம் செய்த நிறுவனமானது தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9.
தன்னை தயாரிப்பாளராகவும் நடிகராகவும் நிலைநிறுத்தி தன் பன்முக தோற்றத்தால தமிழ் சினிமாவில் ஆளுமை செலுத்தும் ஆர்.கே.சுரேஷ் தற்போது ஸ்டுடியோ 9 மியுசிக் எனும் புதிய இசை நிறுவனத்தை துவக்கியுள்ளார்.
தரமான படங்களுக்கு உறுதுனையை இருந்துவந்த ஸ்டுடியோ 9 நிறுவனம் தற்போது தயாரிப்பாளர்களுக்கு மேலும் உதவி செய்யும் வகையில் திரைப்பட பாடல்களை வெளியிடும் நிறுவனத்தை துவங்கியுள்ளது. ஸ்டுடியோ 9 மியுசிக் தரமான திரை இசைப்பாடல்களை இனி வெளியீடு செய்யவிருக்கிறது.
இதன் முதன் தொடக்கமாக புதுமகங்கள் நடிப்பில் விறுவிறுப்பான திரைக்களத்துடன் விரைவில் வெளிவரவுள்ள “அட்டு” எனும் படத்தின் இசை வெளியீட்டை விரைவில் விமர்சையாக வெளியிடவுள்ளது ஸ்டுடியோ 9 மியுசிக்.
அட்டு படத்தை பார்த்த ஆர்.கே.சுரேஷ், புதுப்பேட்டை, ரேணிகுண்டா போன்று இப்படமும் வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை அறுமையாக படம்பிடித்துள்ளது என்றும், அட்டு படத்தின் இயக்குனர் ரத்தன்லிங்கா திரைக்கதையை விருவிருப்பாகவும் அதே நேரம் அனைத்துவிதமான ரசிகர்களை கவரும் படியும் படத்தை இயக்கியிருப்பதாக கூறினார். மேலும் தர்மதுரை படத்தின் வெற்றிக்கு பிறகு வெளியாகும் இப்படம் தனது ஸ்டுடியோ 9 தயாரிப்பு நிறுவனத்திற்கு மேலும் ஒரு மகுடம் சூட்டும் என்று கூறினார்.
அட்டு படத்தின் அதிகாரப்பூர்வ இசை மற்றும் படம் வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.