‘புரியாத புதி’ ரும் – பொங்கல் திருநாளும்

0

 986 total views,  1 views today

9f059c2e-bb5f-4d0e-8633-271d039bb08c
தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து, நட்சத்திர நாயகனாக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு, வருகின்ற 2017 ஆம் ஆண்டும் வெற்றிகரமான  ஆண்டாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை…..இவர் நடிப்பில், ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் – ஜே சதிஷ் குமார் தயாரித்து இருக்கும் ‘புரியாத புதிர்’ திரைப்படம், வருகின்ற பொங்கல் அன்று வெளியாக இருப்பதே அதற்கு சிறந்த உதாரணம்.  விஜய் சேதுபதி – ஜே சதீஷ் குமார் கூட்டணியில் உருவாகும் ஐந்தாவது திரைப்படம் இந்த ‘புரியாத புதிர்’ என்பது குறிப்பிடத்தக்கது.
“விரைவில் பிறக்க இருக்கின்ற தைத்த்திருநாளை வரவேற்க ஒட்டுமொத்த தமிழகமும் உற்சாகத்துடன் தயாராகி கொண்டிருக்கும் இந்த தருவாயில்,  தரமான திரைப்படங்கள் மூலம் அவர்களின் மகழ்ச்சியை இரட்டிப்பாக்குவது, திரையுலகின் முக்கிய கடமை…..விஜய் சேதுபதிக்கும், தமிழக ரசிகர்களுக்கும் எப்போதுமே ஒரு இணை பிரியா உறவு இருக்கிறது……அதனை பொங்கலன்று வெளியாகும் எங்களின் ‘புரியாத புதிர் திரைப்படம் உறுதிப்படுத்தும்….. 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்ததொரு பொழுதுபோக்கு திரைப்படமாக ‘புரியாத புதிர்’ இருக்கும்….” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் நிறுவனத்தின் நிறுவனர் ஜே சதீஷ் குமார்.⁠⁠⁠⁠
 
Share.

Comments are closed.