குறும்படங்களும், குறும்பட படைப்பாளிகளும், தமிழ் திரையுலகில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் திறமையை கண்டறிந்து, அவர்களையும், அவர்களது குறும்படங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பணியை, இணையத்தளம் மற்றும் ஊடகம் மூலமாக சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது, இந்தியாவில் குறும்படங்களை விளம்பரப்படுத்துவதில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு கொண்டிருக்கும் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’. தரமான குறும்படங்களை சரியான விதத்தில் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கும், ‘பெஞ்ச் பிலிக்ஸ்’ நிறுவனத்தின் அடுத்த படைப்பு, இயக்குநர் சதீஷ் விஜயன் இயக்கி இருக்கும் ‘கயித’.
ஒரு தந்தையும், அவரது மகனும், இந்த உலகில் பொதுவாக இருக்கும் ஒன்றை காண ஒரு நாள் முழுவதும் அலைந்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்து கொண்டிருக்கிறது என்பதை இறுதியில் தான் உணர்கிறார்கள். இது தான் இந்த 15 நிமிடங்கள் ஓடக்கூடிய ‘கயித’ படத்தின் ஒரு வரி கதை.