649 total views, 1 views today
குறுகிய நேரத்தில் ஒரு வலுவான கருத்தை ரசிகர்களின் உள்ளங்களில் விதைக்க செய்வது தான், குறும்படங்களின் சிறப்பம்சம். அத்தகைய தரமான குறும்படங்களையும், அதன் படைப்பாளிகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருவது மட்டுமின்றி, தமிழ் திரையுலகிற்கும் அறிமுகப்படுத்தும் பணியை செம்மையாக செய்து வருகின்றது, இந்தியாவில் குறும்படங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’. இவர்கள் வெளியிட்டிருக்கும் அடுத்த குறும்படம், கார்த்திக் கோபால் இயக்கி இருக்கும் ‘டிப்பன் பாக்ஸ்’.
இந்த உலகத்திலேயே கள்ளம் கபடம் இல்லாத மனித பிறவிகள் குழந்தைகள் தான். ஆனால் அவர்களிடமும் இந்த உலகம் கொடுமையான விதத்தில் தான் நடந்து கொள்கின்றது. அந்த கொடுமை ஒரு சாதாரண டிப்பன் பாக்ஸில்’ இருந்து கூட ஆரம்பிக்க கூடும். இது தான் 18 நிமிடம் ஓடக்கூடிய இந்த ‘டிப்பன் பாக்ஸ்’ படத்தின் ஒரு வரி கதை.