புது புது படைப்பாளிகளை அவர்களது குறும்படங்கள் மூலம் கண்டெடுத்து, அவர்களை தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகம் செய்து, குறும்படங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக விளங்கி கொண்டிருக்கிறது ‘பெஞ்ச் பிலிக்ஸ்’. தரமான குறும்படங்களை மட்டுமே தயாரித்து வரும் இவர்களின் அடுத்த படைப்பு, ‘டூமீ’.
வெளி ஊரில் இருந்து சென்னைக்கு படிக்க வரும் மூன்று இளைஞர்களை மையமாக கொண்டு நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இந்த டூமி படத்தின் கதை. விறுவிறுப்பாக நகரும் இந்த படத்தின் கதை, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மொத்தமாக மாறி விடும். இது தான் இந்த ‘டூமி’ படத்தின் சிறப்பம்சம். 26 நிமிடங்கள் ஓடக்கூடிய ‘டூமி’ குறும்படத்தை இயக்குநர் பி எம் அஸ்வின் இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.