‘போகன்’ இசை வெளியீட்டு விழா

0

 1,048 total views,  2 views today

தரமான திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து தயாரிக்கும் ஒரு தயாரிப்பாளர், வித்தியாசமான கதை களங்களை உருவாக்கும் ஒரு இயக்குநர், சிறந்த நட்சத்திர கூட்டணி மற்றும் தலை சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள்…….இவர்கள் அனைவரும் ஒரு திரைப்படத்தில் இணைந்தால், நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும், ஆர்வத்திற்கும் அளவே இருக்காது…..அப்படி ஒரு திரைப்படமாக தற்போது உருவாகி இருப்பது தான், ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ சார்பில் பிரபுதேவா – டாக்டர் கே கணேஷ் இணைந்து தயாரித்து, ரோமியோ ஜூலியட் புகழ் லக்ஷ்மன் இயக்கி இருக்கும் ‘போகன்’. போகன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 3ஆம் தேதி அன்று விமர்சையாக நடைபெற்றது.
“போகன் திரைப்படத்தில் நடிப்பதற்காக அரவிந்த் சுவாமி  சாரை நான் அணுகிய போது , அவர் என்னிடம் ‘இப்போது தான் நம்முடைய தனி ஒருவன்’ கூட்டணி வெற்றி பெற்று இருக்கிறது, அதற்குள் மீண்டும் நாம் இருவரும் கைகோர்ப்பது சரியாக வருமா என்று யோசி’… என்றார்….ஆனால் போகன் படத்தின் கதையை கேட்ட அடுத்த நொடியே அவர் இந்த படத்தில் நடித்தாக வேண்டும் என்பதை உறுதி செய்து விட்டார்….’ரோமியோ ஜூலியட்’ திரைப்படத்திற்கு பிறகு என்னுடைய திரையுலக வாழ்க்கையில் இந்த போகன் மிக பெரிய மைல் கல்லாக அமையும் என முழுவதுமாக நம்புகிறேன்….” என்று நம்பிக்கையுடன் கூறினார் ஜெயம் ரவி.
“மின்சார கனவு படத்தில் நானும், அரவிந்த் சுவாமியும் இணைந்து நடித்தோம். அப்போது எங்களுக்குள் ஒரு சிறிய அளவிலான நட்பு தான் இருந்தது….ஆனால் தற்போது போகன் திரைப்படம் மூலம் எங்களுக்குள் இருந்த நட்புறவு மேலும் வலு பெற்றுள்ளது….இயக்குநர் லக்ஷ்மனின் புதுமையான கதையம்சம், இந்த படத்திற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து இருக்கும் ஜெயம் ரவி மற்றும் நடிப்பின் மீது எல்லையற்ற காதல் கொண்டிருக்கும் ஹன்சிகா என எங்களின் போகன் படத்தில் பல  சிறப்பம்சங்கள் இருக்கின்றது…..அவை நிச்சயமாக ரசிகர்களின் உள்ளங்களை வெல்லும்….” என்று உற்சாகமாக கூறுகிறார் போகன் படத்தின் தயாரிப்பாளர் பிரபுதேவா⁠⁠⁠⁠.
Share.

Comments are closed.

CLOSE
CLOSE