நத்தம் மாரியம்மன் மூவீஸ் கோபிநாத், ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்கொடி முருகன், ஷாலினி புரொடக்ஷன் ஆனந்த் மூவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ காதல் முன்னேற்ற கழகம் “
இந்த படத்தில் இயக்குனர், நடிகர் பாண்டியராஜன் மகன் ப்ரித்விராஜன் கதாநாயகனாக நடிக்கிறார்.
நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர், நாதஸ்வரம் முனிஸ் ராஜா, அமீர் ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய கதாப்பாத்திரத்தில் சிவசேனாதிபதி நடிக்கிறார்.
ஒளிப்பதிவு – ஹாரிஸ் கிருஷ்ணன்
இசை – பி.சி.சிவன்
தயாரிப்பு – கோபிநாத், மலர்கொடி முருகன், ஆனந்த்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மாணிக் சத்யா
படம் பற்றி இயக்குனர் மாணிக் சத்யா கூறியதாவது…
1980 களில் நடக்கின்ற கதை.
படப்பிடிப்பு சென்னை, ஊட்டி, கடலூர் மாவட்டம், திட்டக்குடி, விருத்தாசலம், பெரம்பலூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.