மதன் – உபாஷ்னாராய் நடிக்கும் “ 88 “

0

Loading

_MG_4126

A.ஜெயக்குமார் வழங்கும் ஜெ.கே.மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “88″ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தப்படத்தில் மதன் கதானாயகனாக நடிக்கிறார். கதானாயகியாக உபாஷ்னாராய் நடிக்கிறார். மற்றும் டேனியல் பாலாஜி  ஜெயப்பிரகாஷ் ஜி.எம். குமார் 

பவர் ஸ்டார், அப்புகுட்டி, சாம்ஸ், எஸ்.பி.ராஜா ,கடம் கிஷன் ,மீராகிருஷ்ணன் இவர்களுடன் ஜான் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு.          :         வெற்றிமாறன்

இசை.                   :         தயாரத்னம்

கலை.                   :         ஆரோக்கியராஜ்

பாடல்கள்.            :         அறிவுமதி மதன்கார்க்கி

நடனம்.                 :         காதல் கந்தாஸ்

எடிட்டிங்.              :         அவினாஷ்

ஸ்டண்ட்.              :         சக்தி சரவணன் 

தயாரிப்பு மேற்பார்வை :         ராம் பூபால்

இனை தயாரிப்பு   :         வினோத்

தயாரிப்பு –    A.ஜெயக்குமார் 

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் எம்.மதன்

படம் பற்றி இயக்குனர் மதனிடம் கேட்டோம்…

இன்று விஞ்ஞானம் ரெக்கக் கட்டிப் பறக்கிறது.

பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப் பட்ட செல்போன்களின் பயன்பாடு இன்று எல்லை கடந்து விட்டது. கைக்குள்ளேயே ஒரு உலகத்தை கொண்டு வந்த நவீனம் தான் செல்போன். எதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாதோ அதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிப்பதால் என்ன மாதிரியான சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதைத் தான் இதில் அலசி இருக்கிறோம்..

அதிலும் பெண்கள் எதையெல்லாம் பகிரங்கமாகப் பேச கூடாது என்பது தான் இந்தப் படத்தின் ஹைலைட் கதை. இதை கமர்ஷியல் கலந்து ஆக்‌ஷன் படமாக உருவாக்கி இருக்கிறோம்..

சென்னை மற்றும் ஆந்திரா, ஊட்டி போன்ற  இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

ஜுலை மாதம் 14 ம் தேதி படம் வெளியாகிறது.

 

Share.

Comments are closed.