மருந்து தயாரிப்பை ஆபரேஷன் செய்யும் ஒளடதம்

0

Loading

முற்றிலும் புதிய கலைஞர்களின் பங்களிப்புடன் உருவான ஔடதம் என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அறிமுக நாயகன் நேதாஜி பிரபு கதை எழுதித் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ரமணி.
ஔடதம் என்றால் மருந்து என்று அர்த்தம். மருத்துவத் துறையில் நடக்கும் ஊழல்களை விவரி்க்கும் இந்தப் படத்தின் கதை பலருக்கும் கசப்பு மருந்தாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை என்றாலும், திரைப்பட ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான ஒரு படத்தைப் பார்த்த திருப்தியையும், மருந்து மாத்திரைகள் பற்றய சரியான விழிப்புணர்ச்சியையும் தரும் என்கிறார்கள் இந்தப் படக்குழுவினர்.
கீழக்கரையைச் சேர்ந்த தொழிலதிபரும் அரசியல் பிரமுகருமான எஸ். அஜ்மல்கான் இந்தப் படத்தை தன்னுடைய ரிஃபா அசோசியேட் என்ற நிறுவனத்தின் மூலம் உலகெங்கும் வெளியிடுகிறார்.
படத்தைத் தயாரிப்பதைவிட திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து அதை மக்கள் பார்வைக்கு கொண்டு செல்வதுதான் கடினம் என்ற சூழலில் புதியவரான நீங்கள் எப்படி இந்தப் படத்தை வாங்கி வெளியிடுகின்றீர்கள் என்று அஜ்மல்கானிடம் கேட்டோம்….
முக்கிய கட்சி ஒன்றில் மாவட்ட அளவிலான பொறுப்பு வகிப்பதுடன், கீழக்கரை நகர்மன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தேன். அடிப்படையில் நான் அரசியல்வாதி என்றாலும் அரசியல்வாதிகளால்தான் இந்த நாடே சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதை ஒத்துக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
சமூகப் பொறுப்புணர்வு என்பது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று திடமாக நம்புகிறவன் நான். அதனால்தான் என்னால் இயன்ற சமூகப் பணிகளை எப்போதும் செய்து வருகிறேன்.
ஒளடதம் படத்தைப் பொறுத்தவரை மருத்துவத் துறையில் நடக்கும் ஊழல்களை பிரதானப்படுத்தி கதை அமைக்கப்பட்டிருந்தாலும், வேறு இரண்டு முக்கிய பிரச்னைகள் குறித்தும் இந்தப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒன்று திருநங்கைகள் பற்றியது. மற்றொன்று குழந்தைகள் கடத்தல் சம்பந்தப்பட்டது. குழந்தைகளைக் கடத்தி வெளிநாடுகளில் விற்பனை செய்யும் கும்பலுக்கு அரசியல்வாதிகளே உடந்தையாக இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட பிரச்னைகளை அலசும் கதையை விறுவிறுப்பான சம்பவங்கள் கொண்ட கா்ட்சியமைப்பு மூலம் சுவாரஸ்யமான படமாக உருவாகியிருக்கிறது ஒளடதம். எனவே ஒரு நல்ல கருத்துள்ள படத்தின் மூலம்தான் சினிமாவில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்ற கனவு இதன் மூலம் நிறைவேறுகிறது.
திரைப்படத்தைத் தயாரிப்பதைவிட வெளியிடுவதுதான் மிகவும் கடினம் என்பது எனக்கும் தெரியும். திரைப்பட விநியோகத் துறையில் அனுபவம் மிக்க எனது நண்பர் ஒருவர் எனக்கு உதவி செய்கிறார்.
கண்டிப்பாக ஒளடம் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது. இதைத் தொடர்ந்து மேலும் சில படங்களை நான் வாங்கி விநியோகிக்கத் திட்டமிட்டிருக்கிறேன் என்று நம்பிக்கையுடன் உறுதிபடத் தெரிவித்தார் கீழக்கரை எஸ்.அஜ்மல்கான்.

Share.

Comments are closed.