முனைவர். டாக்டர். ஜேப்பியார் அருங்காட்சியகம்

0

 520 total views,  3 views today

3

1970 களிலே 15-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை உருவாக்கி, முதன்மை வகித்து தன்னிகரற்று திலகமாய் திகழ்ந்தவர், கலைத்தலைவர், எங்கள் கதாநாயகர்அனைவரின் அன்பிற்கும் பரிசாய் “கல்வித்தந்தை என போற்றப்படுபவர், மறைந்த “முனைவர். டாக்டர். ஜேப்பியார் அவர்கள்.

 

அவரை சிறப்பிக்கும் வகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக ஓர் கல்வியாளருக்காக ஓர் பிரம்மாண்டமான அருங்காட்சியகம், ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில், எங்கள் கதாநாயகர் ஈன்றெடுத்த பொன்மகளும், ஜேப்பியார் கல்லூரியின் வேந்தருமான டாக்டர். மு. ரெஜினா ஜேப்பியார் அவர்களால் நிறுவப்பட்டது.

 

எங்கள் கதாநாயகரின் பல்துறை சாதனைகளையும, வாழ்வியலையும், தோற்றம் முதல் மறைவு வரை எம் கண்ணெதிரே தத்ரூபமாய், சீரும் சிறப்புமாய், சித்தரித்த கலை வல்லுனல் திரு. A. P. ஸ்ரீதர் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.

 

இன்று காலை 10.30 மணியளவில் இவ்வருங்காட்சியகத்தின் திறப்பு விழாவை சிறப்பிக்க வந்த சிறப்பு விருந்தினர் R.M.K  பொறியியல் கல்லூரியின் வேந்தர் திரு. R.S. முனிரத்தினம் அவர்களையும், மேலும் இவ்விழாவில் கலந்துகொண்ட டாக்டர். மு. ரெஜினா ஜேப்பியார் – வேந்தர் – ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, திரு. J. முரளி – வேந்தர்- ஜேப்பியார் தொழில்கூட குழுமம்,  டாக்டர்.  மரியசினா ஜான்சன்- சத்தியபாமா பல்கலைகழக வேந்தர், திரு அருள் செல்வி – வேந்தர் – ஆனந்த் இன்ஸ்டிட்யூட், டாக்டர். சின்னதுரை – பனிமலர் பொறியியல் கல்லூரி வேந்தர், திரு. கனாகம்பரம்- தொழிற்பேட்டை  உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர், திரு.  ஐசரி கணேஷ் – வேந்தர் வேல்ஸ் பல்கலைகழகம், திரு. சிட்டிபாபு – வேந்தர் – அக்சயா கட்டுமானம் – தலைவர் அனைத்திந்திய கட்டுமான சங்கம், திருமதி. சரண்யா ஜெயகுமார்- வேந்தர் – செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, ஆயர். லாரன்ஸ், திரு. நாசர், நடிகர் சங்க தலைவர், திரு . சாய்- IFY வேந்தர் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

 
Share.

Comments are closed.

CLOSE
CLOSE