‘மெர்சல்’ சர்ச்சை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கருத்து !

0

Loading

 

 தற்போது”மெர்சல்” திரைப்படத்தில்   வரும் கருத்துக்கள்  வசனங்கள் அனைத்தும்  சில அரசியல்  அமைப்புகள்  பத்திரிகைகள் ஊடகங்கள், இணைய தளங்கள்,சமூக வலை தளங்கள் மூலமாகவும் விமர்சித்து வருபவை தான். 

   ஒரே நாட்டில் அவர்களுக்கு இருக்கும் கருத்து சுதந்திரம்  சினிமா ஊடகத்திற்கும் கலைஞர்களுக்கும் கிடையாதா?

மத்திய அரசால் நிர்வாகிக்கப்படும் தணிக்கைக்குழு அதற்கான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு  அனுமதியளித்த பின் வெளியிடப்படும் திரைப்படங்களை தனி நபர்களின் விமர்சனங்களுக்காக மாற்றியமைப்பதோ அல்லது திரையிடாமல் தடுப்பதோ கருத்து சுதந்திரத்தை கேள்விக்குறியாக்குகிறது. தணிக்கை செய்யப்பட்டு வெளி  வந்த மெர்சல் திரைப்படத்தில் உள்ளவைகளை யாருக்காகவும் நீக்க கூடாது என்பதும் இது போன்ற செயல்கள் பிற்காலத்தில் பல பெரிய பிரச்சனைகள் உருவாக காரணமாகும் என்பதே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கருத்து. 

நன்றி.

– தென்னிந்திய நடிகர் சங்கம்

Share.

Comments are closed.