சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 88வது பெருமைமிகு தயாரிப்பாக உருவாகியிருக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் கோலாகலமாக நடந்தது.
இதைத் தொடர்ந்து அன்று மாலை நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, எங்கள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் எப்படி மாஸ் இயக்குநராகப் புகழ் பெற்றாரோ அதேபோல் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் இயக்குநர் சாய்ரமணியும் மாஸ் இயக்குநராகப் புகழ் பெறுவார் என்று அகமகிழ்ந்து பேசியனார். படத்தின் இயக்குநராக மட்டும் நின்றுவிடாமல் தனது சொந்தப் படத்தைப்போல் மிகக் கடினமாக உழைத்து இந்தப் படத்தை இயக்குநர் சாய்ரமணி உருவாக்கியிருக்கிறார் என்றும் அவரைப் பாராட்டினார் ஆர்.பி.செளத்ரி
படத்தின் பாடல் காட்சிகள் மற்றும் ட்ரைலரைப் பார்க்கும்போது, ஆர்.பி.செளத்ரி சொன்னது உண்மை என்றுதான் தோன்றுகிறது.
முதல் படத்திலேயே அறிமுகப்படுத்தும் தயாரிப்பாளர்களுடன் முட்டி மோதிக்கொள்ளும் இயக்குநர்கள் மத்தியில் இந்த அளவுக்கு தயாரிப்பாளரிடம் நல்ல பெயர் எடுத்திருக்கும் இயக்குநர் சாய்ரமணி பாராட்டுககுரியவர் என்பதில் ஐயமில்லை.
விழாவில் பேசிய அம்மா கிிரயேஷன்ஸ் தயாரிப்பாளர் சிவா, படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்களையும் அதை சரிசெய்ய நாயகன் ராகவா லாரன்ஸ் எப்படி தன் சம்பளத்தையை திருப்பிக் கொடுத்ததுடன், மேலும் தேவைப்படும் பணத்தை கொடுத்ததையும் விவரித்தார்.
சம்பள பாக்கிக்கா பட வெளியீட்டையே நிறுத்தத் துணியும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் ராகவா லாரன்ஸ்களும் இருக்ககத்தான் செய்கிறார்கள்.
படத்தின் இசையமைப்பாளர் அம்ரீஷ் போட்டிருக்கும் பாடல்கள் அனைத்தும் ஹிட் வரிசையில் இடம் பிடிக்கும். அவரும் முன்னணி இசையமைப்பாளர் வரிசையில் முக்கிய இடம் பிடிப்பார்.