மைம் கோபி தன் வாழ்கையில் இழந்த முக்கியமான விஷயம்

0

Loading

தமிழ் சினமாவில் தவிர்க்க முடியாத கதாபாத்திரத்திர நடிகர்களில் முக்கியமானவர் மைம் கோபி.

நிறைய படங்களில் வில்லன், நகைச்சுவை நடிகர் என நாற்பது படங்களுக்கு மேல் இலக்கை தொட்டிருப்பவர் இவர். 

அவர் கூறியதாவது..

பிரசன்னா நடிப்பில் மாரிமுத்து இயக்கத்தில் உருவான “ கண்ணும் கண்ணும் “ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானேன் அதை தொடர்ந்து மெட்ராஸ், மாரி, கபாலி, மாயா, கெத்து, பைரவா, உறியடி, கதகளி, விஜயகாந்த் மகன் நடித்த மதுரைவீரன் போன்ற படங்களில் நடித்திருக்கிறேன்.

வளர்ந்து வரும் நடிகனான எனக்கு  எனது வாழ்கையில் இழந்த மிகபெரிய இழப்பாக நினைப்பது “ செயல் “ படத்தில் நடிக்க முடியாமல் போனது தான்.

செயல் படத்தில் தண்டபாணி என்ற கதாபாத்திரத்தில் நடிப் பதற்காக என்னிடம் பேசினார்கள்.. அருமையான வேடம் அது அனால் அவர்கள் சொன்ன தேதியில் நான் வேறொரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன் அதனால் நடிக்க முடியாமல் போனது அதற்காக அவர்களிடம் வருத்தம் தெரிவித்தேன்.

படம் ரெடியாகி ரிலீசுக்கு தயாராக உள்ளதை தெரிந்து கொண்டு நான் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடமும், இயக்குனரிடமும் கேட்டேன்..போய் படம் பார்த்தேன்..நான் தவற விட்ட அந்த தண்டபாணி கேரக்டர் மிக மிக அருமையான கேரக்டர்.

நான் நடிக்க முடியாமல் போன அந்த கேரக்டரில் சந்திரன் என்பவர் நடித்திருந்தார். அவரும் சிறப்பாக நடித்திருந்தார் இருந்தாலும் நான் தவறவிட்ட மிகபெரிய வாய்ப்பு இது.

எல்லா படத்திலும் ஹீரோவுக்குதான் அறிமுகம் பில்டப்பாக இருக்கும் ஆனால் இந்த படத்தில் மாறுபட்டு வில்லன்னுக்குதான் பில்டப் அதிகமாக இருந்தது அதனால் இனி எந்த வாய்ப்பும்  என் கைநழுவி போகாமல் கவனமாக பார்த்துக் கொள்வேன் என்றார் மைம் கோபி.

Share.

Comments are closed.