Friday, February 14

யுவன் முத்தையா எழுதி, இயக்க இருக்கும் புதிய திரைப்படம் ‘ஈடிலி’

Loading

லிம்மல் ஜி,  லீசா எக்லேயர்ஸ், நிகாரிகா, ‘அட்டு’ ரிஷி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் ஜாக்குவார் தங்கம், அம்மா கிரியேசன்ஸ் டி சிவா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ஸ்கெட்ச் பட இயக்குநர் விஜய் சந்தர், இறுதிச்சுற்று & இறைவி திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இப்படத்தை சாகர் புரொடக்சன்ஸ் மற்றும் சித்தர் மூவீஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.