‘யோகி & பார்ட்னர்ஸ்’ சார்பில் இசையமைப்பாளர் – பாடகர் ரெஹானா தயாரித்து இருக்கும் திரைப்படம், ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ . கற்பனை கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ரெஹானாவின் நண்பர்களான சுபா மற்றும் ஆசீர்வாதம் ஆகியோர் இணை தயாரிப்பு செய்திருக்கின்றனர். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று ஜெயம் ரவி வெளியிட்ட இந்த படத்தின் டிரைலர், யுடியூப் டிரெண்டிங் வரிசையில் இடம் பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் வி. விக்னேஷ் கார்த்திக் கதை எழுதி இயக்கி இருக்கும் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ படத்தில் புதுமுகம் அசார் மற்றும் ‘சூது கவ்வும்’ புகழ் சஞ்சிதா ஷெட்டி முன்னணி கதாப்பாத்திரங்களிலும், யோகி பாபு, மன்சூர் அலி கான், ‘வழக்கு என் 18/9’ புகழ் முத்துராமன், உமா பத்மநாபன், ‘இருக்கு ஆனா இல்ல’ புகழ் ஏதேன், சிங்கப்பூர் தீபன், ராமர், டாக்டர் ஷர்மிலி மற்றும் அர்ச்சனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
“ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ படத்தின் டிரைலரை வெளியிட்ட ஜெயம் ரவிக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். கற்பனை கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகி இருக்கும் எங்கள் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ படத்தின் டிரைலர், எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, யுடியூப் டிரெண்டிங் வரிசையில் இடம் பிடித்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது” என்று உற்சாகமாக கூறுகிறார் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ரெஹானா.