சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளுக்காக டூபாடூ இசைத்தளத்தில் பாடல் ஒன்றை வெளியிட்டார் சேகர் சாய்பரத். இது இவரது முதல் பாடல் ஆகும். இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் பாடல் கேடிவியிலும் ஒளிபரப்பப்பட்டது. இந்த தனிப் பாடலின் வெற்றியின் மூலம் சினிமா பட வாய்ப்பை பெற்றிருக்கிறார் சேகர் சாய்பரத்.
இயக்குநர் வெற்றிமகாலிங்கம் இயக்கும் விசிறி படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் சேகர் சாய்பரத். தல-தளபதி இருவரையும் ரசிகர்கள் கொண்டாடும் விதம் ஒரு பாடலை அமைத்திருக்கிறார்.
இது பற்றி சாய்பரத்திடம் கேட்ட போது “ரஜினி சாரோட தீவிர விசிறி நான். அவருக்கு பண்ண பாட்டு இத்தனை பேருக்கு போய் சேந்தது ரொம்ப சந்தோஷம். அத விட அந்த பாட்டு எனக்கு சினிமா சான்ஸ் வாங்கிக் கொடுத்திருக்கு. வெற்றி மகாலிங்கம் சாரோட விசிறி படத்து தல-தளபதி பத்தி இப்ப ஒரு பாட்டு பண்ணிகிட்டு இருக்கேன். அது மட்டும் இல்லாம் இந்த ஃபெப்ரவரி 14 அன்னிக்கு காதலர் தினத்துக்காக ‘ஃபேஸ்புக் காதல்’ னு ஒரு பாட்டு பண்ணீருக்கேன். அதுவும் டூபாடூல வெளி வருது. எனக்கு வெளிச்சம் தந்த டூபாடூவுக்கும் வெற்றிமகாலிங்கம் சாருக்கும் என்னோட தேங்க்ஸ்.” என்று மகிழ்கிறார் சாய்பரத்.