ரத்தன் மெளலி – மஞ்சு தீக்‌ஷித் நடிக்கும் “ மல்லி ”

0

 338 total views,  1 views today

முத்து சன்னதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ரேணுகா ஜெகதீஷ் தயாரிக்கும் படத்திற்குமல்லி” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் ரத்தன் மெளலி நாயகனாக நடிக்கிறரர்.. இவர் 13 ம் பக்கம் பார்க்க ,வெள்ளிக்கிழமை 13 ம் தேதி அரசகுலம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர்.

நாயகியாக மஞ்சு தீக்‌ஷித் அறிமுகமாகிறார். இவர் மும்பையில் கிஷோர் நமீத் கபூர் நடத்தும் சினிமா பயிற்சி பள்ளியில் நடிப்பு 

பயின்றவர். இந்த பள்ளியில் தான் ஹிருத்திக் ரோஷன் அல்லு அர்ஜூன் ரன்வீர்கபூர் போன்றவர்கள் நடிப்பை பயின்றவர்கள்..

இன்னொரு நாயகியாக தேஜுஸ்ரீ  நடிக்கிறார்.  மற்றும் அருண், ரவிச்சந்திரன், நாகேஷ் சைமன், டெலிபோன்ராஜ்,  அம்சவேலு ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   :         PKH தாஸ். இவர் கனனடத்தில் 100 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்தவர்.

இசை            :         தினேஷ் – பஷீர்

பாடல்கள்     :         புலவர் சிதம்பரனாதன் பாண்டிதுரை

எடிட்டிங்      :         B.s.வாசு

கலை            :         வினோத்

நடனம்         :         சுரேஷ்

ஸ்டண்ட்      :         ஸ்டண்ட் ஷிவு

தயாரிப்பு நிர்வாகம்   :  நடராஜன்

கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கிறார் ரேணுகா ஜெகதீஷ்.

வசனம் எழுதி இயக்குகிறார் வெங்கி நிலா.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்

தன் காதலி மஞ்சு தீக்‌ஷித்துடன் உயிருக்கு பயந்து ஓடும் ரத்தன் மெளலி காட்டுக்குள் இருக்கும் ஒரு பாழந்தடைந்த பங்களாவுக்குள் அடைக்கலமாகிறான்.

அங்கே நடக்கும் திகில் சம்பவங்களே கதை.

படப்பிடிப்பு முழுவதும் வேலூர் ஏலகிரி பெங்களூர் மைசூர் போன்ற இடங்களில் 

நடைபெற்றிருக்கிறது என்றார் இயக்குனர்

 


Share.

Comments are closed.