ராகவா லாரன்ஸின் புத்தாண்டு “அமைதி புரட்சி இன்று முதல் ஆரம்பம்

0

Loading


சாதாரன நிலமையில் இருந்து படிப் படியாக உயர்ந்து இன்று நல்ல நிலமையில் உள்ளவர் ராகவா லாரன்ஸ்…

உயர்ந்த இடத்திற்கு வந்த உடன் பழைய விஷயங்களை மறந்து போகிறவர்கள் மத்தியில் இவர் வித்தியாசமானவர்..

தான் வளர்ந்த உடன் டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து பத்தாண்டுகள் ஆகிறது..

டிரஸ்ட் ஆரம்பித்ததிலிருந்து ஓவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புது விஷயங்களை அமல் படுத்தி அதை வெற்றி ஆக்கி காட்டுவது லாரன்ஸின் வழக்கம் ..

முதலாண்டு ஊனமுற்றோர்களும் ஆட முடியும் என்று அவர்களுக்காக டான்ஸ் பள்ளி ஆரம்பித்தது

அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏழை மக்களின் குழ்ந்தைகள் படிக்க…

மருத்துவ உதவி என்று வருப்வர்களுக்காக
உதவி செய்து இதய அறுவை சிகிச்சை..

விவசாயீகளின் நலன் காத்தல்

குடிசை பகுதி மக்களின் குழந்தைகளை தரமான கல்வி கற்க வைப்பது
அமரர் அப்துல்கலாம் நினைவாக அறம் செய்ய விரும்பு என்று ஒரு கோடி ரூபாய் செலவு செய்தது …

இப்படி ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு விஷயங்களை நடைமுறை படுத்தி வந்த லாரன்ஸ்.

இந்த பத்தாம் ஆண்டில் சுத்தம் சுகாதாரம் என்ற விஷயத்தை கையிடெடுக்கிறார்
[9:42 AM, 1/1/2018] Mownam Ravi: சுத்தம் இல்லா விட்டால் என்னவெல்லாம் பிரச்சனைகளை நாம் சந்தித்திருக்கிறோம்.

 

அதற்காக காசி தியேட்டர் அருகில் உள்ள
அம்பேத்கார் காலணி பகுதியில் வசிக்கும் 600 மக்களின் வேண்டுகோளை ஏற்று அந்த பகுதியை சுத்தப் படுத்துவதென்றும் அந்த பகுதி மக்களுக்கு கொசுவலை அவசர.உதவி விளக்குகள் மற்றும் பசுமை பரட்சிக்காக மரம் நடுவது என்று முடிவெடுத்துள்ளார்

டிரஸ்ட் ஆரம்பித்த போது குழந்தையாக வந்து அடைக்கலமானவர்களுக்கு இப்போது பத்து வயது ஆகிறது..

அவர்களுக்கு பொது நலன் பற்றி அறிவுறுத்தும் பொருட்டும் அவர்களுக்கு தர்ம சிந்தனையை சொல்லும் பொருட்டு அவர்கள் கையால் ந்லத்திட்டங்களையும் சுத்தம் சுகாதாரம் என்கிற எங்களது புத்தாண்டு சபதத்தை
இன்று மாலை 3 மணிக்கு அங்கே துவங்குகிறோம்..

நாள். 1.1.2018
நேரம். மாலை 3 மணிக்கு
இடம். அம்பேத்கார் காலணி
காசி தியேட்டர் BSNL அருகில்

Share.

Comments are closed.