220 total views, 1 views today
பட எண்ணிக்கை எனக்கு முக்கியமில்லை…நல்ல படம் தரமான கதைக்களம் திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் என தேர்ந்தெடுத்து நடிப்பவர் அரவிந்த்சாமி…
இது வரை இப்படித் தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்..
அப்படி சமீபத்தில் அவர் தேர்ந்தெடுத்து ஒத்துக் கொண்டது வித்தியாசமான கதைக்களம் கொண்ட ஒரு படம்..
“என்னமோ நடக்குது” “அச்சமின்றி” போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார்.
செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ள இப்படத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடிக்க உள்ளார்..படத்தில் பங்கு பெறும் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலமான கலைஞர்கள் பற்றியும் தயாரிப்பு நிறுவனம் பற்றியும் விரைவில் அறிவிக்கப் பட உள்ளது.